பகுதி - 742

முற்றிலும் துதியாக
பகுதி - 742

முற்றிலும் துதியாக அமைந்த இந்தப் பாடல் சிதம்பரம் தலத்துக்கானது.

அடிக்கு ஒற்றொழித்து 25 எழுத்துகளைக் கொண்ட பாடல்.  ஒன்று, மூன்று, ஐந்து ஆகிய சீர்களில் ஐந்து குற்றெழுத்துகளும்; இரண்டு, நான்கு, ஆறு ஆகிய சீர்களில் ஒரு நெடிலும் ஒரு குறிலுமாக இரண்டெழுத்துகளும்; ஆறாவது சீரில் மட்டும் (கணக்கில் சேராத) ஒரு வல்லொற்று கூடுதலாகவும் பயில்கின்றன.

தத்த தனதான தத்த தனதான
      தத்த தனதான                      தனதான

கைத்த ருணசோதி யத்தி முகவேத
         கற்ப கசகோத்ரப்                 பெருமாள்காண்

கற்பு சிவகாமி நித்ய கலியாணி 
        கத்தர் குருநாதப்                  பெருமாள்காண்

வித்து ருபராம ருக்கு மருகான
         வெற்றி யயில்பாணிப்            பெருமாள்காண்

வெற்பு ளகடாக முட்கு திரவீசு
         வெற்றி மயில்வாகப்             பெருமாள்காண்

சித்ர முகமாறு முத்து மணிமார்பு
         திக்கி னினிலாதப்                பெருமாள்காண்

தித்தி மிதிதீதெ னொத்தி விளையாடு
         சித்ர ரகுராமப்                    பெருமாள்காண்

சுத்த விரசூரர் பட்டு விழவேலை
         தொட்ட கவிராஜப்                பெருமாள்காண்

துப்பு வளியோடு மப்பு லியுர்மேவு
         சுத்த சிவஞானப்                 பெருமாளே.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com