அக்டோபர் 11 - சர்வதேச பெண்  குழந்தைகள் தினம்

ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 11 ஆம் தேதி சர்வதேச பெண் குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது.
அக்டோபர் 11 - சர்வதேச பெண்  குழந்தைகள் தினம்

ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 11 ஆம் தேதி சர்வதேச பெண் குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது.

பெண் குழந்தைகளின் உரிமைகளை நிலைநாட்டவும், அவர்களின் சாதனைகளை அங்கீகரிக்கும் விதமாகவும், 2011 டிச., 19ம் தேதி ஐக்கிய நாடுகள் சபையில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி அக்டோபர் 11ம் தேதியை சர்வதேச பெண் குழந்தைகள் தினமாக கொண்டாடுவது என்று முடிவு செய்யப்பட்டது.

இந்த வருடத்திற்கான கொள்கையாக பெண் குழந்தைகளின் வளர்ச்சி மற்றும் நீடித்த முன்னேற்றம் ஆகியவை எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. இது தொடர்பான சரியான தகவல்களை திரட்டுவதும் இந்த ஆண்டுக்கான கொள்கைகளில் ஒன்றாகும்.

உலகில் அனைத்து பெண் குழந்தைகளுக்கும் கட்டாயம் கல்வி வழங்கவேண்டும் என ஐ.நா., வலியுறுத்துகிறது. பெண் குழந்தைகள் கல்வி கற்பதன் மூலம், அவர்கள் மட்டுமல்லாமல் சமூகமும் சேர்ந்து முன்னேறும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com