19.02.1627: சத்திரபதி சிவாஜி பிறந்த தினம் இன்று.

பொதுவாக சத்திரபதி சிவாஜி மகாராஜ் என்று அறியப்படும் சிவாஜி ராஜே போஸ்லே, மராட்டியப் பேரரசுக்கு அடித்தளம் அமைத்தவராவார்.
19.02.1627: சத்திரபதி சிவாஜி பிறந்த தினம் இன்று.

பொதுவாக சத்திரபதி சிவாஜி மகாராஜ் என்று அறியப்படும் சிவாஜி ராஜே போஸ்லே, மராட்டியப் பேரரசுக்கு அடித்தளம் அமைத்தவராவார்.

சாஹாஜி போஸ்லே மற்றும் ஜிஜாபாய் ஆகியோருக்குப் பிறந்த இரண்டு புதல்வர்களில், சிவாஜி இளைய மகனாவார். பிஜாப்பூர் சுல்தானியம், தக்காண சுல்தானியர்கள் மற்றும் மொகலாயர்களுக்கு எதிராக பல்வேறு காலங்களில் இராணுவ சேவைகளை அளித்த அவர் தந்தை சாஹாஜி, ஒரு மராட்டிய தளபதியாக விளங்கியவர்.

ஹிந்தவி சுயராஜ்ஜியத்தின் (இந்திய சுயாட்சி) சித்தாந்தத்திற்கு ஆதரவளித்த சிவாஜி ராஜே போஸ்லே, பிஜாப்பூர் சுல்தானியத்திற்கும், இறுதியாக வலிமைமிக்க மொகலாய சாம்ராஜ்ஜியத்தின் அன்னிய ஆட்சிக்கும் நேரடியாக சவால் விட அவர்தம் தோழர்களுடனும், வீரர்களுடனும் ஓர் இந்து கோவிலில் சத்தியப்பிரமாணம் எடுத்துக்கொண்டார்.

சிவாஜி, அவரின் வாழ்நாளில், மேற்கு இந்தியாவின் தற்போதைய மாநிலமான மஹாராஷ்டிராவில் வலிமையாக பாதுகாக்கப்பட்ட ஒரு பகுதியைக் தம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதில் பெரும் பங்கு வகித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com