தட்சிணாமூர்த்தியாகிய நான்.. 

கலைஞர் என்ற ஒற்றைச் சொல்லை தனது அடையாளமாக்கிக் கொண்டதோடு நிற்காமல், தமிழனுக்கென்று ஒரு அடையாளத்தையும் ஏற்படுத்திக் கொடுத்தவர் திமுக தலைவர் கருணாநிதி.
file photo
file photo
Published on
Updated on
2 min read


கலைஞர் என்ற ஒற்றைச் சொல்லை தனது அடையாளமாக்கிக் கொண்டதோடு நிற்காமல், தமிழனுக்கென்று ஒரு அடையாளத்தையும் ஏற்படுத்திக் கொடுத்தவர் திமுக தலைவர் கருணாநிதி.

1924ம் ஆண்டு ஜூன் 3ம் தேதி திருவாரூர் மாவட்டம் திருக்குவளையில் முத்துவேல் - அஞ்சுகம் அம்மாவின் மகனாகப் பிறந்தார் கருணாநிதி. கருணாநிதியின் இயற்பெயர் தட்சிணாமூர்த்தி. 

இவருக்கு, தூக்குமேடை என்ற நாடகத்தின் போது எம்.ஆர். ராதா கலைஞர் என்ற பட்டத்தை சூட்டினார். இன்று வரை கருணாநிதி கலைஞர் என்ற பட்டப் பெயராலேயே அதிகம் அறியப்படுகிறார்.

குடும்பம்
இவருக்கு மூன்று முறை திருமணம் நடந்தது. முதல் மனைவி பத்மாவதி அம்மாள் மறைவுக்குப் பிறகு தயாளு அம்மாள், ராஜாத்தி அம்மாளுடன் திருமணம் நடைபெற்றது. இவருக்கு மு.க. முத்து, மு.க. அழகிரி, மு.க. ஸ்டாலின், மு.க. தமிழரசு என்ற மகன்களும், செல்வி, கனிமொழி என்ற மகள்களும் உள்ளனர்.

அரசியலில் ஆர்வம்
கருணாநிதி தனது 14ஆவது வயதில் நீதிக் கட்சித் தலைவர் அழகிரிசாமியின் பேச்சால் ஈர்க்கப்பட்டு பொது வாழ்க்கைக்குள் நுழைந்தார். முதன் முதலாக ஹிந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் மூலம்தான் கருணாநிதி அரசியலில் நுழைந்தார். 1953ம் ஆண்டு கல்லக்குடி போராட்டத்தில் பங்கேற்றதே கருணாநிதியின் பொது வாழ்க்கைக்கு அச்சிட்டது.  

அவர் வாழ்ந்த பகுதியில் இருந்த இளைஞர்களை திரட்டி மாணவர் நேசன் என்ற கையேடுகளையும் பிரசுரித்தார். திராவிடக் கட்சிகளில் முதல் முறையாக தமிழ்நாடு தமிழ் மாணவர்கள் மன்றம் என்ற அமைப்பை மாணவர்களின் ஒத்துழைப்போடு துவக்கினார் கருணாநிதி.

திமுக 
1949ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17ம் தேதி அறிஞர் அண்ணாவால் துவக்கி வைக்கப்பட்டது திராவிட முன்னேற்றக் கழகம். கழகத்தின் பொதுச் செயலராக அண்ணா தேர்வு செய்யப்பட்டார். 1969ம் ஆண்டு அண்ணா மறைவுக்குப் பிறகு கருணாநிதி கட்சியின் தலைவராக நியமிக்கப்பட்டார்.

சட்டமன்றத்துக்குள்..
1957ம் ஆண்டு திமுக தேர்தலில் போட்டியிட்டது. குளித்தலையில் போட்டியிட்ட கருணாநிதி தேர்தலில் வெற்றி பெற்றார். அந்த ஆண்டுதான், திமுகவும், கருணாநிதியும் தமிழக சட்டப்பேரவையில் ஒன்றாக அடியெடுத்து வைத்தது. 

1967 தமிழக ஆட்சியில் பங்குபெற்றது திமுக. 1969ம் ஆண்டு அண்ணாவின் மறைவைத் தொடர்ந்து தமிழகத்தின் முதல்வராகவும் தேர்வு செய்யப்பட்டார்.

பிளவுகளை சந்தித்த திமுக
திமுக தனது நீண்ட நெடிய பயணத்தில் இரண்டு முறை மிகப்பெரிய பிளவுகளை சந்தித்தது. 1972ம் ஆண்டு திமுகவில் இருந்து பிரிந்து சென்ற எம்ஜிஆர் அதிமுகவை உருவாக்கினார்.

அதே போல, 1999ல் மீண்டும் பிளவு ஏற்பட்டது. அப்போது வைகோ தலைமையில் பிரிந்து சென்றவர்கள் மதிமுக கட்சியை துவக்கினர்.

சட்டமன்ற உறுப்பினராக
கருணாநிதி தான் போட்டியிட்ட அனைத்து சட்டப்பேரவைத் தேர்தல்களிலும் வெற்றி பெற்றவர் என்ற பெருமையையும் கொண்டவர். 1957ம் ஆண்டு சுயேட்சையாகப் போட்டியிட்ட கருணாநிதி, அதன் பிறகு, திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.

போட்டியிட்ட ஆண்டுகளும், தொகுதிகளும்
1957    குளித்தலை    
1962    தஞ்சாவூர்    
1967    சைதாப்பேட்டை    
1971    சைதாப்பேட்டை
1977    அண்ணா நகர்    
1980    அண்ணா நகர்    
1989    துறைமுகம்    
1991    துறைமுகம்
1996    சேப்பாக்கம்    
2001    சேப்பாக்கம்    
2006    சேப்பாக்கம்    
2011    திருவாரூர்
2016    திருவாரூர்    

ஐந்து முறை முதல்வராக இருந்தவர்
1969 - 1971 அண்ணா மறைவுக்குப் பின் முதல் முறையாக தமிழகத்தின் ஆட்சிப் பொறுப்பேற்றார் கருணாநிதி.
1971 - 1976ல் இரண்டாவது முறையாக
1989 - 1991 3வது முறையாக முதல்வரானார்
1996 - 2001 4வது முறையாக ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தார்
2006 - 2011 வரை ஐந்தாவது முறையாக முதல்வராக பதவி வகித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.