

சிந்துவெளி நாகரிகம்
* தற்போது நாம் வாழும் காலத்தை கணினிக் காலம் என்கிறோம்.
* ஆதிமனிதன் கல்லைப் பயன்படுத்திய காலம் - கற்காலம் எனப்படும்.
* மனிதனுக்கு முதன் முதலில் தெரிந்த உலோகம் - செம்பு(தாமிரம்).
* செம்பு, கல் இரண்டையும் பயன்படுத்திய காலம் - செம்புக்கற்காலம்.
* சிந்துவெளி மக்களுக்கு தெரியாத உலோகம் - இரும்பு.
* இந்தியாவின் தொன்மை வாய்ந்த நகர நாகரிகமான சிந்துவெளி (ஹரப்பா) நாகரிகம் செழித்திருந்த காலம் - செம்புக் கற்காலம்.
* இந்திய நாகரிகத்தின் தொடக்கமான நாகரிகம் - சிந்துவெளி நாகரிகம்.
* தொன்மை இந்தியாவின் முதுபெரும் நகரம் - பஞ்சாப் மாநிலத்தில் உள்ள ராவிக் கரைப்பகுதிகள்.
* ஆங்கிலேயர்கள் 1856 ஆம் ஆண்டு இருப்புப்பாதை அமைத்த நதிக்கரை - பஞ்சாப் மாநிலத்தின் சிந்து நதியின் கிளை நதியான ராவி நதிக்கரை.
* ராவி நதிக்கரையில் இருந்த மணல் மேடுகளில் கிடைத்த செங்கற்களை வைத்து கி.பி. 1921 இல் அகழ்வு ஆராய்ச்சி செய்யப்பட்டது.
* ஹரப்பா என்ற சிந்து மொழிச் சொல்லுக்கு - புதையுண்ட நகரம் என்று பொருள்.
* சிந்துவெளி நாகரிகம் - 4,700 ஆண்டுகளுக்கு முற்பட்டது.
* சிந்துவெளி நாகரிகத்தை போன்று இந்தியாவில் வேறு எங்கெல்லாம் புதையுண்டு கண்டெடுக்கப்பட்டன - மொகஞ்சதாரோ, சான்குதாரோ, கலிபங்கன், லோத்தல்
* சிந்துவெளி நகரங்களின் கோட்டைப்பகுதியில் கட்டமைப்பு நுணுக்கங்கள் நிறைந்து அமைக்கப்பட்டிருந்தது - பெருங்குளம்.
* பெருங்குளம் அமைந்துள்ள இடம் - ஹரப்பா மொகஞ்சதாரோ
* சிந்துவெளி மக்கள் பயன்படுத்திய எழுத்து முறை - சித்திர எழுத்து.
* முத்திரைகளில் எழுதப்பட்டிருந்த எழுத்துக்கள் - சித்திர வடிவிலான எழுத்துக்கள்.
* சிந்துவெளி நகரங்களில் செவ்வக வடிவிலான முத்திரைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
* குளத்தில் நீர் கசியாமல் இருக்க மெழுகு பூசிய சுட்ட செங்கற்களால் கட்டப்பட்டிருந்தது.
* குளங்கள் கிண்ற்று நீரால் நிரப்பப்பட்டிருந்தன.
* குளங்களின் இருபக்கங்களிலும் படிக்கட்டுகள் இருந்தன.
* குளத்திலிருந்து அழுக்கு நீர் வெளியே செல்ல தனிக்கால்வாய் அமைக்கப்பட்டிருந்தன.
* ஹரப்பா நாகரிக வீடுகளில் ஜன்னல்கள் இல்லை.
* வீடுகளின் முன்பு குப்பைத் தொட்டிகள் அமைக்கப்பட்டிருந்தன.
* வீட்டுக் கழிவுநீரை வெளியேற்ற பாதாளச்சாக்கடை அமைக்கப்பட்டிருந்தன.
* மொகஞ்சதாரோ என்ற சிந்து மொழிச் சொல்லுக்கு இடுகாட்டு மேடு என்று பொருள்.
* சிந்து சமவெளி நாகரிகத்தில் சிறப்பாக செயல்பட்ட நாகரிகம் - நகர நிர்வாகம்.
* சிந்து சமவெளி நாகரிகத்தில் பயன்பாட்டு அறிவியல் தொழில் நுட்பங்கள் நடைமுறையில் இருந்தன.
* சிந்துவெளி நாகரிகம் பற்றிய அறிய உதவுவது - அகழ்வாராய்ச்சிச் சான்றுகள்.
* லோத்தல் என்னும் செம்புக் கற்காலத் துறைமுகம் காணப்படும் இடம் - குஜராத்
* ஹரப்பா நாகரிகம் - மாநகர நாகரிகம்
* ஹரப்பா மக்களின் முக்கிய கடவுள் - பசுபதி என்ற சிவனையும், பெண் கடவுளையும், லிங்கம், சூலம், மரம்
* சிந்துவெளி மக்கள் இறந்தவர்களை புதைக்கும்போது அச்சடலங்களுடன் உணவு, அணிகலன்களையும் சேர்த்து புதைத்தனர்.
* சித்திர எழுத்துக்கள் தொல்-தமிழ் எழுத்துக்களுடன் தொடர்புடையது.
* சிந்துவெளி மக்களின் முக்கிய தொழில் - விவசாயம்
* சிந்துவெளி மக்கள் பயிரிட்ட தானியம் - கோதுமை, பார்லி
* சிந்துவெளி மக்கள் தானியங்களை களஞ்சியங்களில் சேமித்தனர்.
* சிந்துவெளி மக்கள் பயன்படுத்திய ஆடை - பருத்தி. கம்பளி ஆடைகள்.
* சிந்துவெளி ஏழை மக்கள் கிளிஞ்சல்கள், தாமிரங்களால் ஆன அணிகலன்களை அணிந்தனர்.
* சிந்துவெளி மக்கள் டெர்ரா கோட்டா எனப்படும் சுடுமண் பாண்டம் செய்வதில் திறமையானவர்கள்.
* சிந்துவெளி நாகரிகத்தின் சிற்பக் கலைக்கு உதாரணம்: வெண்கலத்தால் ஆன நாட்டிய மங்கையின் உருவச்சிலை. தாடியுடன் காட்சி தரும் மனிதனின் சுண்ணாம்புக்கல் சிலை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.