
01. மொகலாய ராஜவம்சம் ஆட்சி செய்த கால கட்டம் - 1526 - 1857
02. பாபரின் முழுப்பெயர் - ஸகிருத்தீன் முகமது பாபர்.
03. இந்தியா மீது படையெடுக்க பாபருக்கு அழைப்பு விடுத்தவர்கள் - ஆவம்கான், தெளத்கான்.
04. ஹூமாயூனின் வாழ்க்கை வரலாறு - ஹீமாயூன் நாமா.
05. குஜராத்தை வென்றதன் நினைவாக அக்பர் கட்டிய நினைவிடம் - புலந்த தர்வாஸா
06. தீன் இலாஹி என்பதன் பொருள் - கடவுளின் மதம்.
07. அக்பரின் அவையை அலங்கரித்த இசைக் கலைஞர் - தான்சேன்.
08. ஜஹாங்கீர் காலத்தில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட போதைப்பொருள் - புகையிலை.
09. ஒளரங்கசீப்புடன் மோதிய மராட்டிய மன்னர் - சிவாஜி.
10. மொகலாயர்களின் அரசவை மொழி - பாரசீகம்.
11. இந்தியாவில் கடற்கரையோரமாக அமைந்துள்ள மாநிலங்களின் எண்ணிக்கை - ஒன்பது.
12. இந்தியாவில் மிக அதிகமான தேயிலை உற்பத்தி செய்யும் மாநிலம் - அசோம்.
13. இந்தியாவில் மிக அதிக காலம் காலனி ஆதிக்கத்திற்கு ஆட்பட்டிருந்த மாநிலம் - கோவா.
14. ஆங்கிலத்தை மட்டுமே அலுவலக மொழியாகக் கொண்ட ஒரே இந்திய மாநிலம் - நாகலாந்து.
15. உருவான நாளிலிருந்து இன்றுவரை மதுவிலக்கு அமலில் இருக்கும் மாநிலம் - குஜராத்
16. ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் அலுவல் மொழி - உருது.
17. இந்திய மாநிலங்களிலேயே உள்ளூர் வழக்கு மொழிகள் மிக அதிக அளவில் பேசப்படும் மாநிலம் - அருணாச்சலப் பிரதேசம்.
18. அதிகமான மாநிலங்களுடன் எல்லைப் பகிரிந்து கொள்ளும் மாநிலம் - உத்திரப்பிரதேசம்
19. இருதலை நகரமுள்ள ஒரே இந்திய மாநிலம் - ஜம்மு-காஷ்மீர்
20. மூன்று பகுதிகளுக்கு (இரண்டு மாநிலம்+ஒரு மத்திய ஆட்சிப்பகுதி) பொதுவான தலைநகரம் - சண்டிகர்.
21. தனது நூறாவது வயதில் பாரத் ரத்னா விருது பெற்ற இந்தியரும், இந்தியாவின் முதல் பெண்கள் பல்கலைக் கழகத்தை நிறுவியவரும், SNDT பல்கலைக்கழகத்தை நிறுவியவர் - டி.கே. கார்வே
31. பாண்டிச்சேரி யூனியன் பிரதேசத்தின் பகுதிகள் பரவியுள்ள மாநிலங்கள் - தமிழ்நாடு, ஆந்திரா, கேரளம்.
32. இந்தியாவின் மிகக் குறைவான வாக்காளர்களைக் கொண்ட லோக்சபைத் தொகுதி - இலட்சத்தீவு
33. இந்தியாவின் தென்கோடியான இந்திரா முனை அமைந்துள்ள தீவு -அந்தமான் நிக்கோபர்.
34. சண்டிகர் நகரத்தை திட்டமிட்டு வடிவமைத்தவர் - பிரெஞ்சு கட்டிட வடிவமைப்பாளர் - லீ காரபூசிரியர்.
35. தில்லிக்கு தேசிய தலைநகரப்பகுதி அந்தஸ்து வழங்கிய அரசியல் சட்டத்திருத்தம் - 69-ம் திருத்தம்.
38. இந்தியாவின் மிகப் பெரிய மத்திய ஆட்சிப் பகுதி - அந்தமான்-நிக்கோபர்.
37. இந்தியாவின் மிகச் சிறிய மத்திய ஆட்சிப் பகுதி - இலட்சத்தீவு.
38. எழுத்தறிவு அதிகமுள்ள மத்திய ஆட்சிப் பகுதி - இலட்சத்தீவு.
39. இந்தியாவின் மரகத்தீவு - அந்தமான் நிக்கோபர் தீவுகள்
40. சட்டப் பேரவை கொண்ட ஒரே மத்திய ஆட்சிப்பகுதி - புதுச்சேரி.
41. சங்ககாலத் தமிழகம் இந்து சமயத்திற்கு வழங்கிய இறைவழிபாடு - முருகவழிபாடு
42. சேரர்களின் மாலை - பனம் பூமாலை
43. சங்ககாலத்தில் வேளிர்கள் என்றவைக்கப்பட்டவர்கள் - குறுநில மன்னர்கள்
44. தமிழ்கூடம் என்றழைக்கப்பட்ட நகரம் - மதுரை
45. சங்க இலக்கியங்களில் கிரேக்கர்கள் இவ்வாறு அழைக்கப்பட்டனர் - யாவனர்கள்
46. மயிலுக்கு போர்வை அளித்த வள்ளல் - பேகன்.
47. பூம்புகாரில் நடைபெற்ற வணிகம் குறித்து குறிப்பிடும் நூல் - பட்டினப்பாலை
48. சேர மரபைப் பற்றி கூறும் நூல் - பதிற்றுப்பத்து.
49. சோழர்களின் கிராம நிர்வாகம் பற்றி குறிப்பிடும் கல்வெட்டு - உத்திரமேரூர் கல்வெட்டு.
50. கொல்லிமலைப்பகுதியை ஆண்ட மன்னன் - ஓரி.
61. தென்னிந்தியாவின் காசி - இராமேஸ்வரம்.
62. கிழக்கின் டிராய் என்று அழைக்கப்படும் தமிழக நகரம் - செஞ்சிக்கோட்டை
63. இயற்கை ரப்பர் உற்பத்தி செய்யும் ஒர் மாவட்டம் - கன்னியாகுமாரி
64. காந்தியடிகளால் கதர் தலைநகரம் என்று சிறப்பிக்கப்பட்ட நகரம் - திருப்பூர்
65. இந்தியாவின் இரண்டாவது பெரிய உப்பு உற்பத்தி மையம் - தூத்துக்குடி
66. சுதந்திர இந்தியாவுடன் இணைந்த முதல் சமஸ்தானம் - புதுக்கோட்டை
67. தென்னிந்திய ஆக்ஸ்போர்டு எனச் சிறப்பிக்கப்படுவது - திருநெல்வேலி மாவட்டம்.
68. தமிழக அரசின் அதிகாரப்பூர்வ முத்திரை - ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோவில் கோபுரம்.
69. வெறி நாய்க்கடிக்கான மருந்து தயாரிக்கும் பாஸ்டர் இனஸ்டியூட் ஆப் இந்தியா அமைந்துள்ள மாவட்டம் - நீலகிரி.
70. இந்திய நியூட்ரினோ ஆய்வு மையம் அமைந்துள்ள இடம் - தேனி மாவட்டம் மேக மலை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.