TNPSC-IV தேர்விற்கான அரங்கம்: பொதுத் தமிழ் - 10

தேவதாசி குடும்பத்தில் பிறந்த பெண்களுக்கு ஆடலும் பாடலும் உரியன. ஆனால்,
TNPSC-IV தேர்விற்கான அரங்கம்: பொதுத் தமிழ் - 10
Updated on
4 min read

தனிப்பாடல்

"இன்பர்வான் எல்லைஇரா மனையே பாடி

என்கொனர்ந்தாய் பாணாநீ என்றால் பாணி

வம்பதாம்க ளபமென்றேன் பூசும் என்றாள்

மாதங்கம் என்றேன்யாம் வாழ்ந்தே மென்றாள்

பம்புசீர் வேழமென்றேன் தின்னு மென்றாள்

பகடென்றான் உழுமென்றாள் பழனத் தன்னைக்

கம்பமா என்றேன்நற் களியாம் என்றாள்

கைம்மாஎன் றேன்சும்மா கலங்கி னாளே!"

- அந்தக்கவி வீரராகவர்

சொற்பொருள்:

* களபம், மாதங்கம், வேழம், பகடு, கம்பமா, கைம்மா - யானை
* களபம் - சந்தனம்
* மாதங்கம் - பொன்
* வேழம் - கரும்பு
* பசுடு - எருது
* கம்பமா - கம்ப மாவு

ஆசிரியர் குறிப்பு:

* பிறந்த ஊர்: காஞ்சிபுரம் மாவட்டம்
* வாழ்ந்த ஊர்: களத்தூர்
* தந்தை: வடுகநாதர்
* சிறப்பு: சீட்டுக்கவி பாடுவதில் வல்லவர்.
* காலம்: 17ம் நூற்றாண்டு.
* நூல்கள்: சந்திரவாணன் கோவை, சேயூர் முருகன் பிள்ளைத்தமிழ், சேயூர்க் கலம்பகம், திருக்கழுக்குன்றப் புராணம்.

நூல் குறிப்பு:
* இப்பாடல், தனிப்பாடல் திரட்டு" என்னும் நூலில் இடம் பெற்றுள்ளது.
* தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வாழ்ந்த புலவர் பலர் பாடிய பாடல்களின் தொகுப்பே இந்நூல்.
* இதில் 110 புலவர்கள் பாடிய 1113 பாடல்கள் உள்ளன.

தமிழகத்தின் அன்னிபெசன்ட்

அறிஞர் அண்ணா:

* அறிஞர் அண்ணா அவர்களால் "தமிழகத்தின் அன்னிபெசன்ட்" எனப் புகழப்பட்டவர்.
* இளமை காலம்: மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் 1833 ஆம் ஆண்டு பிறந்தார்.
* தேவதாசி குடியில் பிறந்தார்.
* தேவதாசி குடும்பத்தில் பிறந்த பெண்களுக்கு ஆடலும் பாடலும் உரியன. ஆனால், இவரது பெற்றோர் அவருக்கு அவற்றைக் கற்றுத்தர மறுத்தால், இவரின் குடும்பத்தை அவ்வினத்தார் ஓதுக்கி வைத்தனர்.
* வறுமையின் காரணமாக அம்மையாரின் தந்தை கிருஷ்ணசுவாமி மகளையும், மனைவியையும் விட்டு சென்றார்.
* அம்மையாரின் தாயார் இவருக்கு ஐந்து வயதாகும் பொது பத்து ரூபாய்க்கு தேவதாசி ஒருவரிடம் விற்றுவிட்டார்.

சுயம்பு:
* தனக்கு இசையும், நாட்டியமும் கற்றுத்தந்த சுயம்பு என்பவரை மணந்தார்.
* சுயம்பு, அம்மையாரின் அணைத்து போராட்டங்களுக்கும் துணைப் புரிந்தார்.

முதல் போராட்டம்:
* 1917 இல் தனது முதல் போராட்டத்தை மயிலாடுதுறையில் தொடங்கினார்.
* தேவதாசி முறையை எதிர்த்து போராட்டம் நடத்தினார்.

காந்தி மீது பற்று:

* அம்மையார் காந்தியடிகள் மீது மிகுந்த பற்று வைத்திருந்தார்.
* ஆங்கிலேயர்களின் தடை உத்தரவு காரணமாக தான் பேசாமல் தனது கருத்துக்களை "கரும்பலகையில்" எழுதி வெளிப்படித்தினார்.

மூவர்ணக் கொடி ஆடை:
* காந்தி இரண்டாவது வட்ட மேசை மாநாட்டில் கலந்து கொண்டு, இந்திய திரும்பியவுடன் கைது செய்யப்பட்டார்.
* அம்மையார் மூவர்ணக் கொடியை ஆடையாக உடுத்தினார்.

குடிசையில் வாழ்தல்:
* காந்தியத்தை ஏற்போர் குடிசையில் வாழ வேண்டும் என காந்தியடிகள் கூறியதை அடுத்து, அம்மையார் தனது ஓட்டு வீட்டை விட்டு குடிசையில் குடியேறினார்.
* அக்குடிலின் வெளியே, கரும்பலகையில் "காதர் அணிந்கவர்கள், உள்ளே வரவும்" என எழுதி இருந்தார்.

மொழிப்போர் பேரணி:
* 1938 ஆம் ஆண்டு நடந்த மொழிப்போர் பேரணியில் உறையூர் (திருச்சி) முதல் சென்னை வரை 42 நாள், 577 மைல் நடைபயணம் மேற்கொண்டார்.
* நடைபயணத்தின் போது 87 பொதுக்கூட்டங்களில் உரையாற்றினார்.
* அப்பேரணியில் நடந்து வந்த ஒரே பெண் அம்மையார் மட்டுமே.

விடிவெள்ளி:
* அம்மையார், பெண் உரிமைக்குப் பாடுபட்ட விடிவெள்ளியாகத் திகழ்ந்தார்.
* பொதுவாழ்வில் 50 ஆண்டுகள் ஈடுபட்டுத் தனது 80 வயதில் 27.06.1962 அன்று இவ்வுலக வாழ்வை நீத்தார்.

திருமண உதவித் திட்டம்:
* 1989 ஆம் ஆண்டு மூவலூர் அம்மையாரின் நினைவைப் போற்றும் வகையில், அவரது பெயரால் ஏழைப் பெண்களுக்கான திருமண உதவித் திட்டத்தினை தமிழக அரசு வழங்கி வருகிறது.

அம்மானை

* திருச்செந்திற்கலம்பகம் என்னும் நூலை எழுதியவர் சுவாமிநாத தேசிகர்.

* இவரை ஈசான தேசிகர் என்றும் அழைப்பர்.

* தந்தை = தாண்டவமூர்த்தி

* கல்வி கற்று = மயிலேறும் பெருமாள்

* இவர் திருவாவடுதுறை ஞானதேசிகராகிய அம்பலவாண தேசிகமூர்த்திக்கு தொண்டராய் இருந்தார்.

நூல் குறிப்பு:

* திருச்செந்திற்கலம்பகம் என்னும் இந்நூல் 96 வகை சிற்றிலக்கியங்களுள் ஒன்று.

* கலம்பகம் -= கலம் + பகம் (களம் =12, பகம் = 6, கலம்பகம் = 18)

* கலம்பகம் 18 உருபுகளை கொண்டது.

சீவக சிந்தாமணி

சொற்பொருள்:

* விண் - வானம்

* வரை - மலை

* முழவு - மத்தளம்

* மதுகரம் - தேன் உண்ணும் வண்டு

* திருதக்கதேவர் சோழர் குலத்தில் பிறந்தார்.

* இவர் சமண தமயத்தை சார்ந்தவர்.

* இவர் பாடிய மற்றொரு நூல் "நரி விருத்தம்" ஆகும்.

* ஐம்பெரும்காப்பியங்களுள் ஒன்று இந்நூல்.

* இந்நூலின் கதை தலைவன் சீவகன்.

* அவன் பெயரை இணைந்துச் சீவக சிந்தாமணி எனப் பெயர் பெற்றது.

* இந்நூலுக்கு மணநூல் என்னும் வேறு பெயரும் உண்டு.

எங்கள் தமிழ்

* கதி - துணை

* பேறு - செல்வம்

* நனி - மிகுதி (மிக்க)

* தரம் - தகுதி

* புவி - உலகம்

* இயற்பெயர்: கனக சுப்புரத்தினம்

* பாரதியார் மீது கொண்ட பற்றினால் பாரதிதாசன் என மாற்றி அமைத்துக்கொண்டார்.

* பெற்றோர்: கனகசபை - இலக்குமியம்மாள்

* கல்வி: தமிழ், பிரெஞ்சு,ஆங்கிலம் ஆகியவற்றில் புலமை மிக்கவர்.

* இயற்றியவை: குடும்ப விளக்கு, பாண்டியன் பரிசு, சேர தாண்டவம், இருண்ட வீடு, தமிழச்சியின் கத்தி, பிசிராந்தையார், குருஞ்சித் திட்டு, அழகியின் சிரிப்பு, தமிழியக்கம் முதலியன.

* காலம்: 29.04.1891 - 21.04.1964

ஓவியக்கலை

ஓவியம்:

* எல்லைகளையெல்லாம் கடந்து எங்கும் பரந்து வாழும் மக்கள் மனங்களைக் கொள்ளை கொண்டு வியக்க வைக்கும் விந்தை மொழி ஓவியம்.
* காண்பவரைக் கவர்ந்திழுக்கும் உள்ளங்களைத் தன்வயப்படுத்தும் உயர்ந்த கலை ஓவியக்கலை.

கோட்டோவியங்கள்:
* சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த மக்கள் மலைக்குகைகளிலும் பாறைகளிலும் கோட்டோவியங்கள் வரைந்தனர்.

* தமிழகத்தில் 25க்கும் மேற்பட்ட இடங்களில் (மான், போர் செய்தல், விலங்கு வேட்டை ஆகியவற்றை குறிக்கும்) குகை ஓவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

கண்ணெழுத்து:
* தமிழ் நாட்டில் சங்க காலத்திற்கு முன்னரே ஓவியங்கள் வரையப்பட்டன.
* தாம் வரைந்த ஓவியங்களை முதலில் "சுண்ணெழுத்து" என்றே வழங்கினர்.

எழுத்து:
* எழுத்து என்பதற்கு ஓவியம் என்றும் பொருள் உண்டு என பரிபாடலும், குறுந்தொகையும் கூறுகின்றன.

கோட்டோவியங்கள்:
* ஓவியம் வரைவதற்கு நேர்கோடு, கோணக்கோடு, வளைகோடு முதலியன அடிப்படை.
* இவ்வாறு வரையப்படுபவை "கோட்டோவியங்கள்" எனப்படும்.

நடுகல் வணக்கம்:
* தொல்காப்பியம் நடு கல் வணக்கம் பற்றிக் கூறுகிறது.
* நடுகல்லி போரில் வீரமரணம் எய்திய வீரனது உருவம், பெயர், பெருமைக்குரிய செயல் முதலியவற்றைப் பொரிக்கும் பழக்கம் இருந்தது.

ஓவியக்கலையின் வேறுபெயர்கள்:
* ஓவ, ஓவம், ஓவியம், சித்திரம், படம், படாம், வட்டிகைச் செய்தி

ஒவியக் கலைஞனின் வேறு பெயர்கள்:

* ஓவியர், ஓவியப்புலவன், கண்ணுள் விளைஞன், சித்திரகாரர், வித்தக விளைஞன், வித்தகர், கிளவி வல்லோன்

நச்சினார்கினியர் இலக்கணம்:
* நச்சினார்க்கினியர் தம் உரையில் ஓவியருக்கு, நோக்கினார் கண்ணிடத்தே தம் தொழில் நிறுத்துவோர்" என இலக்கணம் வகுத்துள்ளார்.

ஓவியக் குழுக்கள்:
* ஓவிய கலைஞர் குழுவை "ஓவிய மாக்கள்" என்று அழைத்தனர்.
* ஆண் ஓவியர் = சித்திராங்கதன்
* பெண் ஓவியர் = சித்திரசேனா

சிலப்பதிகாரம்:
* ஆடல் மகள் மாதவி, "ஓவியச் செந்நூல் உரை நூற்கிடக்கையும் கற்றுத்துறை போகப் பொற்கொடி மடந்தையாக இருந்தனள்" எனச் சிலம்பு பகிர்கிறது.

வரைகருவிகள்:
* வண்ணம் தீட்டும் கோல் தூரிகை, துகிலிகை, வட்டிகை எனப்பட்டது.
* வண்ணங்கள் குழப்பும் பலகைக்கு "வட்டிகைப் பலகை" எனப் பெயர்.

புறநானூறு:

"ஓவத்தனைய இடனுடை வனப்பு"

- புறநானூறு

*  இவ்வாறு வீட்டின் அழகை ஓவியத்திற்கு ஒப்ப வைத்துக் கவிஞர் போற்றுகிறார்.

ஓவிய எழினி:
* நாடகமேடைகளில் பல வண்ணங்களில் கவின்மிகு காட்சிகள் தீட்டப்பட்ட திரைச்சீலைகள் தொங்குகினவற்றை "ஓவிய எழினி" கொண்டு அறிகிறோம்.

புனையா ஓவியம்:
* வண்ணம் கலக்காமல் கரித்துண்டுகளால் வடிவம் மட்டும் வரைவதைப் புனையா ஓவியம் என்பர்.
* இன்றும், இது மென்கோட்டு ஓவியமாக நடைமுறையில் உள்ளது.

நெடுநல்வாடை:
* ஆடு முதலான 12 இராசிகளையும், விண்மீன்களையும் வரைந்த செய்தி, நெடுநல்வாடை கூறுகிறது.

தமிழரின் ஓவிய மரபு:
* ஓவியங்களில் "நிற்றல், இருத்தல், கிடத்தல்" ஆகிய மனித இயல்புகளையும்
* "வீரம், சாந்தம், சினம், வியப்பு, உவகை" ஆகிய மெய்ப்பாடுகளையும்
* "உத்தமம், மத்திமம், அதமம், தசதாளம், நவதாளம், பஞ்சதாளம் முதலிய அளவுகளையும் வலியுறுத்துவது தமிழருக்கே உரிய ஓவிய மரபுகளாக விளங்குகின்றன.

மகேந்திரவர்மப் பல்லவன்:
* சங்க்க காலத்தில் செழிந்திருந்த ஓவியக்கலை இடைக்காலத்தில் சிதைந்து மறைந்துபோகத் தொடங்கியது.
* மறைந்து கொண்டிருந்த ஓவியக்கலைக்கு மீண்டும் புத்துயிர் ஊட்டியவர்கள் பல்லவர்கள்.
* 7 ஆம் நூற்றாண்டில் தமிழகத்தை ஆண்ட முதலாம் மகேந்திரவர்மப் பல்லவன் சிறந்த ஓவியன்.
* கல்வெட்டுகள் இவனைச் "சித்திரகாரப்புலி" எனப் புகழ்கின்றன.
* "தட்சினசித்திரம்" என்னும் ஓவிய நூலூக்கு இம்மன்னன் உரை எழுதியுள்ளான்.

சித்தன்னவாசல் - ஓவியக் கருவூலம்:
* திருநந்திக்கரையில் சேரர் கால ஓவியங்கள் கிடைத்துள்ளன.
* புதுக்கோட்கோட்டைக்கு அருகே சித்தன்வாசல் என்னும் குகைக்கோவில் ஓவியங்கள் ஓவியக் கருவூலமாக வைத்து போற்ற தக்கது.
* கி.பி.9ஆம் நூற்றாண்டில் "அவனிய சேகர ஸ்ரீவல்லபன்" என்ற பாண்டிய மன்னன் காலத்தில், மதுரை ஆசிரயர் "இளம்கெளதமன்" இவ்வோவியங்களை வரைந்தார் என வல்வெட்டுகள் கூறுகிறது.

சோழர் கால ஓவியங்கள்:
* சோழர்கால வனப்புமிக்க ஓவியங்களைத் தஞ்சைப் பெரியகோவிலில் காணலாம்.
* அதில் கவின்மிகு கயிலைகாட்சி உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com