TNPSC-IV தேர்விற்கான அரங்கம்: பொதுத் தமிழ் - 11

திருச்சி மலைமீது உள்ள இறைவனான தாயுமானவர் அருளாள் பிறந்தமையால் இவருக்கு தாயுமானவர்
TNPSC-IV தேர்விற்கான அரங்கம்: பொதுத் தமிழ் - 11
Updated on
5 min read

எட்டாம் வகுப்பு

செய்யுள் - வாழ்த்து

முத்தே பவளமே மொய்த்தபசும் பொற்சுடரே

சித்தேஎன் னுள்ளத் தெளிவே பராபரமே

கண்ணே கருத்தேயென் கற்பகமே கண்ணிறைந்த

விண்ணே ஆனந்த வியப்பே பராபரமே

- தாயுமானவர்

சொற்பொருள்:

* சுடர் - ஒளி

* ஆன்நதம் - மகிழ்ச்சி

* பராபரம் - மேலான பொருள், இறைவன்

ஆசிரியர் குறிப்பு:

* பெயர் - தாயுமானவர்

* பெயர் காரணம்: திருச்சி மலைமீது உள்ள இறைவனான தாயுமானவர் அருளாள் பிறந்தமையால் இவருக்கு தாயுமானவர் என்று பெயர் சூட்டப்பட்டது.

* பெற்றோர் - கேடிலியப்பர் - கெசவல்லி அம்மையார்.

* மனைவி - மட்டுவார்குழலி

* ஊர்: நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள திருமறைக்காடு(வேதாரண்யம்)

* நூல்: தாயுமானவர் திருப்பாடல் திரட்டு

* பணி: திருச்சயை ஆண்ட விஷய ரகுநாத சொக்கலிங்கரிடம் கருவூல அலுவலர்.

* காலம்: கி.பி.18ம் நூற்றாண்டு

* நினைவில்லம்: இராமநாதபுரம் மாவட்டம் இலட்சுமிபுரத்தில் உள்ளது.

* நூல் குறிப்பு: இப்பாடல் "தாயுமானவர் திருப்பாடல் திரட்டு" என்னும் நூலில் "பராபரக்கண்ணி" என்னும் தலைப்பில் உள்ளது.

திருக்குறள்

* வினை - செயல்

* காப்பு - காவல்

* நீரவர் - அறிவுடையார்

* கேண்மை - நட்பு

* பேதையார் - அறிவிலார்

* நவில்தொறும் - கற்கக்கற்க

* நயம் - இன்பம்

* நகுதல் - சிரித்தல்

* நட்டல் - நட்புக்கொள்ளுதல்

* இடித்தல் - கடிந்துரைத்தல்

* கிழமை - உரிமை

* முகநக - முகம் மலர

* அகம் - உள்ளம்

* ஆறு - நல்வழி

* உய்த்து - செலுத்தி

* அல்லல் - துன்பம்

* உடுக்கை - ஆடை

* இடுக்கண் - துன்பம்

* களைவது - நீக்குவது

* கொட்பின்றி - வேறுபாடு இல்லாமல்

* ஊன்றும் - தாங்கும்

* புனைதல் -  புகழ்தல்

* புல் - கீழான

* பெயர்  - திருவள்ளுவர்

* வேறுபெயர்கள்: முதற்பாவலர், பொய்யில் புலவர், பெருநாவலர், செந்நாப்போதார.

* காலம் - கி.மு.31ம் நூற்றாண்டு.

* சிறப்பு: பாரதியார் இவரை வள்ளுவன் தன்னை "உலகினுக்கே தந்து வான்புகல் கொண்ட வையகமே" என்றார்.

* பாரதிதாசன் இவரை : வள்ளுவனைப் பெற்றதால் பெற்றதே புகழ் வையகமோ" என்றார்.

நூல் குறிப்பு:

* இது பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று.

* குறள் வெண்பாக்களால் ஆனதால், குறள் எனவும், மேன்மை கருதி திரு என்னும் அடைமொழியுடன் திருகுறள் எனவும் அழைக்கப்பெறுகிறது.

* இது "உலகப்பொதுமறை" என போற்றப்படுகிறது.

* வாயுறை வாழ்த்து, பொதுமறை, பொய்யா மொழி, தெய்வ நூல் முதலிய பெயர்களும் இதற்கு உண்டு.

நூல் சிறப்பு:

* உருசிய நாட்டில் அணு துளைக்காத கிரெம்ளின் மாளிகையில் உள்ள சுரங்கப் பாதுகாப்புப் பெட்டகத்தில் திருக்குறளும் இடம்பெற்றுள்ளது.

* இங்கிலாந்து நாட்டுக் காட்சிச்சாலையில் திருக்குறள் விவிலியத்துடன் வைக்கப்பட்டுள்ளது.

தமிழ் வளர்த்த சான்றோர்

* புதுக்கவிதைக்கு - பாரதியார்

* சமுதாய புரட்சிக்கு - பாரதிதாசன்

* பொதுவுடைமை - திரு.வி.க

* தனித்தழுக்கு - மறைமலையடிகள்

* பேச்சுக்கலை - அறிஞர் அண்ணா

சிறுகதை - புதுமைப்பித்தன்

வீரமாமுனிவர் (1680 - 1747)

* நாடு - இத்தாலி நாட்டில் பிறந்தார்.

* இயற்பெயர் - "கான்ஸ்டாண்டின் ஜோசப் பெஸ்கி".

* இவர் தம் முப்பதாம் வயதில் தமிழகம் வந்தார்.

* தமிழின் மீது கொண்ட பற்றின் காரணமாக தன் பெயரை "தைரியநாதன்" என மாற்றிகொண்டார்.

* பின்னர் தனித்தமிழுக்கு ஏற்ப "வீரமாமுனிவர்" என மாற்றம் பெற்றது.

சதுரகராதி தேம்பாவணி:

* தமிழில் முதன்முதலாக "சதுரகராதி" என்னும் அகரமுதலியை படைத்தார்.

* கிறித்துவ சமயத்தாரின் கலைக்களஞ்சியம் எனப் போற்றப்படும் "தேம்பாவணி" என்னும் காப்பியத்தை படைத்தார்.

எழுத்து சீர்திருத்தம்:

* தமிழ் எழுத்து வரிவடிவத்தை திருத்தி, எழுத்துச் சீர்திருத்தம் செய்தார்.

குட்டித் தொல்காப்பியம்:

* குட்டித் தொல்காப்பியம் எனப் போற்றப்படும் "தொன்னூல் விளக்கம்" படைத்தார்.

பிற நூல்கள்:

* கலம்பகம், அம்மானை போன்ற சிற்றிலக்கிய வகை நூல்களையும், பரமார்த்த குரு கதை என்னும் நகைச்சுவை நூலையும் படைத்தார்.

ரா.பி.சேதுபிள்ளையின் பாராட்டு:

* தேம்பாவணி, காவலூர் கலம்பகம் கதம்ப மாலையாக காட்சி அளிக்கிறது. தொன்னூல் பொன்நூலாக இலங்குகின்றது. சதுரகராதி முத்தாரமாக மிளிர்கிறது. வீரமாமுனிவர் தமிழ் முனிவர்களுள் ஒருவராக விளங்குகின்றார் என ரா.பி.சேதுபிள்ளை பாராட்டுகிறார்.

* குணங்குடி மஸ்தான் (1788 - 1835):

* மாதவஞ்ச்சேர் மேலோர் வழுத்தும் குணங்குடியான்" என்று அழைக்கப்படுபவர்.

* இயற்பெயர் - குணங்குடி மஸ்தான் சாகிபு.

* இளம்வயதிலே முற்றும் துறந்தவராய் வாழ்ந்தவர்.

தாயுமானவர் மீது பற்று:

* இவர் தாயுமானவர் பாடல்கள் மீட்கு பெரிதும் பற்று கொண்டவர்.

* அவருடைய பராப்பரக்கண்ணிப் போலவே ஓசை நயம் மிக்க பாடல்கள் பல இயற்றியுள்ளார்.

* பராப்பரக்கண்ணி, எக்காலக்கண்ணி, மனோன்மணிக்கண்ணி, நந்தீஸ்வரக்கண்ணி முதலியன இவர் பாடிய சில கண்ணிகள்.

அழியாப் பேரின்பம்:

* இவர்தம் பாடல்கள் உலகின் உண்மை நிலையை உணர்த்தி அழியாப் பேரின்பப் பெருவாழ்விற்கு நன்மை அழைத்து செல்லும்.

* இவர் குருநிலை, தவநிலை, துறவுநிலை, நியமநிலை, காட்சிநிலை, தியானநிலை, சமானநிலை எனப் பொருள்தரும் வகையில் பாடல்கள் பல இயற்றியுள்ளார்.

நான்மணிமாலை:

* இவர் மீது கொண்ட பற்றின் காரணமாக திருத்தணி சரவணப் பெருமாள் நான்மணிமாலை ஒன்று இயற்றியுள்ளார்.

* அந்நூலில் "மடல் சூல்புவியில உளத்திருளைக் கருணை ஒளியினாற் களைந்து, விடல்சூழ்பவரின், குனங்குடியான், மிக்கோன எனற்குஓர் தடையுளதோ?" எனக் கேட்கிறார்.

* தடை உண்டு என உரைப்பார் தமிழுலகில் இல்லை" என்கிறார்.

* ஆறுமுக நாவலர் (1822 - 1879):

* இவர் இலங்கையில் உள்ள யாழ்ப்பாணத்தில் பிறந்தவர்.

* இயற்பெயர் - ஆறுமுகனார்.

* இளமையிலே சைவ சிந்தாந்த சாத்திரங்கள் படித்தவர்.

நாவலர் பட்டம்:

* இவரின் சொற்பொழிவு திறமையை கண்டு திருவாவடுதுறை ஆதினம் இவருக்கு "நாவலர்" பட்டம் வழங்கினார்.

* இவர் சிறந்த பதிப்பாசிரியர் மற்றும் உரையாசிரியர்.

இலக்கண வலுவற்ற தூய்மை:

* நாவலரே முதன் முதலில் இலக்கண வலுவற்ற தூய்மையான எளிய தமிழ் உரைநடையை கையாண்டார்.

பரிதிமாற் கலைஞர் பாராட்டு:

* உரைநடைக்கு இவர் ஆற்றிய தொண்டிற்காக பருதிமாற் கலைஞர் இவரை "வசன நடை கைவந்த வல்லாளர்" என பாராட்டினார்.

அச்சுக்கூடம் நிறுவுதல்:

* சென்னையில் அச்சுக்கூடம் நிறுவி, சிறந்த தமிழ் நூல்கள் பல பதிப்பித்தார்.

* பாரதம், பெரியபுராணம், கந்தபுராணம், திருக்குறள் பரிமேலழகர் உரை போன்ற இலக்கிய நூல்களை பதிப்பித்தார்.

* இலக்கண வினாவிடை, இலக்கண சுருக்கம், நன்னூல் விருத்தியுரை, நன்னூல் காண்டிகையுரை, இலக்கண கொத்து, இலக்கண சூறாவளி முதலிய இலக்கண நூல்களை பதிப்பித்து வெளியிட்டார்.

* முதல் வகுப்பு முதல் நான்கமா வகுப்பு வரை பாலபாடங்களையும் எழுதி அச்சிட்டு வெளியிட்டார்.

துணைப்பாடம்: ஜி.யு.போப்

பிறப்பு:

* பெயர் - ஜியார்ஜ் யுக்ளோ போப் என்று அழைக்கப்படும் ஜி.யு. போப்

* பிறந்த ஊர்: பிரான்ஸ் நாட்டின் எட்வர்ட் தீவு

* பிறப்பு - கி.பி. 1820 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24 ஆம் தேதி

* பெற்றோர் - ஜான் போப், கெதரின் போப்

ஹென்றி:

* போப்பின் தமையனார் ஹென்றி என்பவர், தமிழகத்தில் கிறித்துவமதத்தைப் பரப்பும் சமய குருவாகப் பணியாற்றினார்.

* அவரைப்போன்று பணியாற்ற விரும்பி, தமது 19வது வயதில் தமிழகம் வந்தார்.

* அவர் பாய்மரக் கப்பலில் தமிழகம் வந்து சரே எட்டு மாதங்கள் ஆகின.

முதல் சமயப்பணி:

* தமிழ்நாட்டில் சென்னை சாந்தோம் பகுதியில் முதலில் சமயப்பணி ஆற்றினார்.

திருநெல்வேலி - சாயர்புரம்:

* திருநெல்வேலி மாவட்டம் சாயர்புரம் என்னும் பகுதியில் சமயப்பணி ஆற்றினார்.

* அங்கு பள்ளிகளை நிறுவினார். கல்விப்பணியையும் சமயப்பணியையும் ஒருங்கே ஆற்றினார்.

* சமயக்கல்லூரியில் தமிழ் இலக்கியங்கள், ஆங்கில இலக்கியங்கள் முதலியவற்றையும் கிரேக்கம், இலத்தின், எபிரேயம் முதலிய மொழிகளையும் கற்றுத்தர ஏற்பாடு செய்தார்.

* கணிதம், அறிவாய்வு(தருக்கம்), மெய்யறிவு(தத்துவம்) ஆகியவற்றை கற்பிக்கும் கல்லூரி ஆசிரியராகவும் பணியாற்றினார்.

* திருநெல்வேலியில் 1842 முதல் 1849 வரை பணியாற்றினார்.

திருமணம்:
* 1850 இல் இங்கிலாந்து சென்று திருமணம் செய்துக்கொண்டு, தம் மனைவியுடன் மீண்டும் தமிழகம் வந்து தஞ்சாவூரில் சமயப்பணி ஆற்றினார்.

தமிழ் இலக்கிய ஆர்வம்:
* தஞ்சையில் பணியாற்றிய எட்டு ஆண்டுக் காலத்தில், புறநானூறு முதலான சங்க நூல்களையும் நன்னூல் முதலான இலக்கணங்களையும் பயின்றார்.
* அவற்றை ாங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டார்.

ஏடுகளில் தமிழ் பணி:

* இந்தியன் சஞ்சிகை, இந்தியாவின் தொல்பொருள் ஆய்வு" போன்ற ஏடுகளில் ஆராய்ச்சி கட்டுரைகளை ஆங்கிலத்தில் எழுதினார்.

* அக்கட்டுரைகளில் புறநானூற்றுப் பாடல்களும், புறப்பொருள் வெண்பாமாலைத் திணை விளக்கங்களும், தமிழ்ப்புலவர் வரலாறும் இடம் பெற்றன.

தமிழ் செய்யுட் கலம்பகம்:
* போப் உயர்ந்த பண்பாட்டுக்குரிய பொறுமை, சினமின்மை, நட்பு முதலானவற்றை விளக்கும் 600 செய்யுள்களை, நீதிநூல்களில் இருந்து எடுத்து, "தமிழ் செய்யுட் கலம்பகம்" என்னும் தொகுத்து அதன் விளக்கங்களையும் எழுதி வெளியிட்டார்.

தமிழ் பாடலின் முன்னோடி:
* பள்ளி குழந்தைகளுக்காக வினாவிடை முறையில் இரு இலக்கண நூல்களை எழுதி வெளியிட்டார்.
* பெரியவர்கள் கற்கும் வகையில் இலக்கண நூலொன்றையும் படைத்தார்.
* மேலை நாட்டார் தமிழை எளிதில் கற்றுக்கொள்ளும் வகையில் "தமிழ்-ஆங்கில அகராதி" ஒன்றையும், "ஆங்கிலம்-தமிழ் அகராதி" ஒன்றையும் எழுதி வெளியிட்டார்.
* பழைய தமிழ் இலக்கியங்களில் இருந்து சில செய்யுள்களைத் தொகுத்து நூலாக வெளியிட்டு, அதனைப் பாடநூலாக வைக்க ஏற்பாடு செய்தார்.

உதகை:

* 1858 ஆம் ஆண்டு உதகமண்டலம் சென்ற அவர், பள்ளி ஒன்றைத் தொடங்கி அதன் ஆசிரியராகவும் பணியாற்றினார்.

தமிழ்த்தொண்டு:

* இங்கிலாந்திற்கு சென்ற போப் 23 ஆண்டுகள் இங்கிலாந்துப் பல்கலைக்கழகத்தில் தமிழ், தெலுங்கு கற்பிக்கும் பேராசிரியராக பணிபுரிந்தார்.

தமிழ் மாணவன்:

* 13.02.1908 அன்று போப் தம் இன்னுயிரை நீத்தார்.

* அவர், தம் கல்லறையில் "இங்கே ஒரு தமிழ் மாணவன் உறங்கிக் கொண்டிருக்கிறான்" என எழுத வேண்டுமென்று தமது இறுதிமுறியில் எழுதி வைத்தார்.

* அவர் தன்னை "தமிழ் மாணவன்" என்றே தம்மை கூறிக்கொண்டார்.

இலக்கணம்: குற்றியலுகரம்

* குறுமை + இயல் + உகரம் = குற்றியலுகரம்

* குறுமை - குருகிய

* இயல் - ஓசை

* உகரம் - உ என்னும் எழுத்து ஆகும்.

* குறில் எழுத்து எத்தனை மாத்திரை ஒரு மாத்திரை கால அளவில் ஒலிக்க வேண்டும்.

* நெடில் எழுத்து இரண்டு மாத்திரை கால அளவில் ஒலிக்க வேண்டும்.

* மெய்யெழுத்துகள் அரை மாத்திரை கால அளவில் ஒலிக்க வேண்டும்.

* உகரம் குறிலானால் ஒரு மாத்திரை கால அளவில் ஒலிக்க வேண்டும்.

* கு,சு,டு,து,பு,று ஆகிய ஆறு வல்லின மெய் எழுத்துகளைச் சேர்த்து வரும் போது உகரம் அரை மாத்திரையாகக் குறைத்து ஒலிக்கும்.

* கு,சு,டு,து,பு,று என்பன வல்லின மெய்களின் மேல் உகர ஊர்ந்து வரும் எழுத்துகள் ஆகும்.

* குற்றியலுகரம் அரை மாத்திரை அளவில் அளவில் ஒலிக்கும்.

* கு,சு,டு,து,பு,று என்னும் ஆறு வல்லின எழுத்துக்கள் தனிநெடிலைச் சார்ந்து வரும்போது, பல எழுத்துக்களைச் சார்ந்து சொல்லின் இறுதியில் வரும்போது ஒரு மாத்திரை அளவில் குறைந்து ஒலிக்கும்.

* எஃகு, கஃகு, அஃது இந்தச் சொற்களில் இருந்து கு, சு,து என்னும் வல்லின மெய்கள் மேல் ஊர்ந்த உகரமானது ஆய்த எழுத்தைத் தொடர்ந்து வந்துள்ளதால் இவை ஆய்தத்தொடர்க் குற்றியலுகரம் ஆகும்.

* சுக்கு, கச்சு, பட்டு இச்சொற்களில் கு,க,டு ஆகிய எழுத்துகளுக்கு முன் வல்லின மெய்யெழுத்துகள் வந்தால் அவை வல்லினத் தொடர்க் குறிறியலுகரம் ஆகும்.

* சங்கு, மஞ்சு, நண்டு, சந்து இச்சொற்கள் மென்றொடர்க் குற்றியலுகரம்.

* கொய்து, சார்பு, மூழ்கு இச்சொற்கள் இடைத்தொடர்க் குற்றியலுகரம் ஆகும்.

* குற்றியலுகரம் ஆறு வகைப்படும்.

* நெடில் தொடர்க் குறிறியலுகரத்தைத் தவிர ஏனைய ஐவகைக் குற்றியலுகரச் சொற்கள் இரண்டுக்கு மேற்பட்ட எழுத்துக்களைப் பெற்று வரும்.

குற்றியலிகரம்

* குறுமை + இயல் + இகரம் = குற்றியலிகரம்

* இகரம் - இ என்னும் எழுத்தாகும்.

* குற்றியலிகரத்தில் வரும் இகரம், தன் மாத்திரையிலிருந்து அரை மாத்திரை அளவு குறைந்து ஒலிக்கும்.

* நிலைமொழி குற்றியலுகரமாக இருந்து, வருமொழி யகரம் வரின், நிலைமொழி உகரம், இகரமாகத் திரிந்து தன் மாத்திரை அளவில் குறைந்து ஒலிப்பது குற்றியலிகரம்.

* கேண்மியா, சென்மியா ஆகியவற்றில் வரும் "மியா" என்னும் அசைச் சொல்லில் உள்ள இரகரம் தன் மாத்திரையில் குறைந்து ஒலிக்கும்.

* இகரம் தன் மாத்திரையில் குறைந்து ஒலிக்கும் நன்னூல் - யகரம் வரக் குறள் உத்திரி இகரமும் அசைச்சொல் மியாவின் இகரமும் குறிய. - நன்னூல் 93

முற்றியலுகரம்

* தனக்குரிய ஒரு மாத்திரை அளவிலிருந்து குறையாத உகரம் முற்றியலுகரம் எனப்படும்.

* தனிக்குறில் எழுத்தை அடுத்து வரும் உகரம் வல்லின உகரம் எனப்படும்.

* காணு, உண்ணு, உருமு இவற்றின் ஈற்றிலுள்ள மெல்லின (னு,மு) முற்றியலுகரங்கள்.

நான் விரும்பும் கவிஞர்

* புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பிறந்த வருடம் - 29.04.1891

* பாரதிதாசனின் தந்தை பெயர் - கனகசபை

* பாரதிதாசனின் இயற்பெயர் - சுப்புரத்தினம்

* யார் மேல் கண்ட பற்றால் தம்பெயரைப் பாரதிதாசன் என்று மாற்றிக் கொண்டார் - பாரதியார்.

* பாரதிதாசன் எழுதிய பிறநூல்கள் - இசையமுது, குடும்ப விளக்கு, மணிமேகலைவெண்பா, கண்ணகி புரட்சிக் காப்பியம், படித்த பெண்கள், இளைஞர் இலக்கியம், குறிஞ்சித் திட்டு போன்றவை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com