அலைகளின் தாகம்: கவிஞர் இரா .இரவி

கடலைக் கடந்து விடலாமென்று
கடல் அலைகள் முயலுகின்றன !

கடக்க முடியாமல் தோற்றுப்போய்
கடலுக்கு திரும்பி விடுகின்றன !

தோல்வி பற்றிய கவலைகள்
துளியுமின்றி அலைகள்அ லைகின்றன !

என்றாவது ஒருநாள் கடப்போம்
என்ற நம்பிக்கையில் வருகின்றன !

பாறைகளிலும் முட்டி மோதுகின்றன
பயணம் முடிவின்றித் தொடர்கின்றன !

அலைகளின் தாகம் கடல் அறியவில்லை
அறிந்திருந்தால் ஆறுதலாகி  இருக்கும்  !

கடலில் வாழ்ந்தாலும் அலைகளுக்கென்று
கனவும் ஏக்கமும் தாகமும் உண்டு !

கடல் தன்னில் வாழும் அலைகளை
கட்டாயம் கடல் மதித்திட வேண்டும் !

எதோ ஒரு ஏக்கத்தின் காரணமாகவே
எப்போதும் அலைகள் ஏங்கி வருகின்றன !

அலைகள் இல்லாத கடலும் உண்டு
அலைகள்தான் கடலுக்கு அழகு !

முயற்சி திருவினையாக்கும் என்ற
முக்கியமான குறளுக்கு எடுத்துக்காட்டு !

ஒருநாள் பொங்கி எழுந்து அலைகள்
கடலைக் கடக்கும் அந்நாள் சுனாமியாகும்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com