என்ன தவம் செய்தேன்: கவிஞர் இரா. இரவி

Updated on
1 min read

உலகின் முதல் மொழி பேசிடும் தமிழனாக
உலகில் பிறந்ததற்கு என்ன தவம் செய்தேன்!
உலகின் முதல் மனிதனான தமிழனாக
உலகில் பிறந்ததற்கு என்ன தவம் செய்தேன்!

உலகில் ஓராயிரம் மொழிகள் இருந்தாலும்
உன்னத தமிழுக்கு இணை இல்லை!
பன்மொழி அறிஞன் பாரதி பாராட்டினான்
பைந்தமிழே மொழிகளில் சிறந்தது என்றான்!

மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணர்
மொழிகளை ஆராய்ந்து சொன்னார் தமிழே முதல் என்று!
அமெரிக்காவின் மொழி ஆய்வாளர்கள் இன்று
அறிவித்து உள்ளனர் தமிழே முதல் என்று!

தமிழின் ஆளுமையை உலகம் அறிந்தது
தமிழின் அருமையை தமிழன் அறியவில்லை இன்று!
அற்புதமான தமிழ்மொழியில் தமிழன்
ஆங்கிலம் கலந்து தமிங்கிலம் பேசி வருகிறான்!

தமிழன் தமிழனோடு பேசும் போதும்
தமிழை மறந்து ஆங்கிலத்தில் பேசுகின்றான்!
தமிழன் இல்லத்தில் நல்ல தமிழ் ஒலிக்கவில்லை
தமிழன் நாவில் நல்ல தமிழ் ஒலிக்கவில்லை !

தமிழகத்தின் கோவில்களில் தமிழ் ஒலிக்கவில்லை
தமிழகத்தின் நீதிமன்றங்களில் தமிழ் ஒலிக்கவில்லை !
தமிழ் ஊடகங்களில் நல்லதமிழ் இல்லவே இல்லை
தமிழ்நாட்டில் தமிழ் இல்லாமல் இருப்பது முறை இல்லை !

தமிழர்களே தமிழின்  அருமை பெருமை அறிந்திடுங்கள்
தமிழைக் காத்திட அணி திரள்வோம் வாருங்கள்!
உலகின் முதல்மொழியை உருக்குலைய விடலாமா?
உலகம் முழுவதும் ஒலிக்கும் மொழியை சிதைத்திடலாமா?

தேசப்பிதா காந்தியடிகள் திருக்குறளை படிப்பதற்காக
தமிழனாகப் பிறக்க வேண்டும் என்று ஆசைப்பட்டாய்!
எல்லோரும் விரும்புகின்றனர் தமிழராகப் பிறப்பதற்கு
என்ன தவம் செய்தேன் தமிழராகப் பிறப்பதற்கு!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com