ஆப்பிள் அல்வா

செய்முறை: பாலுடன் துளி கூட தண்ணீர் சேர்க்காமல் பால்கோவா பதத்திற்கு கெட்டியாகக் காய்ச்ச வேண்டும்.
ஆப்பிள் அல்வா

தேவையானவை:

ஆப்பிள் - 3

தேங்காய் - 1

பால் - அரைலிட்டர்

சர்க்கரை - 50 கிராம்

செய்முறை: பாலுடன் துளி கூட தண்ணீர் சேர்க்காமல் பால்கோவா பதத்திற்கு கெட்டியாகக் காய்ச்ச வேண்டும். ஆப்பிளைத் துருவ வேண்டும். தேங்காயைப் பால் எடுக்க வேண்டும். கனமான பாத்திரத்தில் கெட்டியான தேங்காய்ப் பாலைவிட்டு அடுப்பில் வைத்து கொதித்ததும் சர்க்கரை சேர்த்து அடிப்பிடிக்காமல் கிளற வேண்டும். கலவை கெட்டியானவுடன் பால்கோவா, துருவிய ஆப்பிள் சேர்த்து கெட்டியாகக் கிளறி அடுப்பிலிருந்து கீழே இறக்க வேண்டும். ஆப்பிள் சத்தான அல்வாவாக இருக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com