
பாடல் 8
பெற்று, இனிப் போக்குவனோ உன்னை, என் தனிப்
பேருயிரை, உற்ற இருவினையாய், உயிராய், பயன் ஆயவையாய்
முற்ற இம் மூ உலகும் பெரும் தூறாய், தூற்றில் புக்கு
முற்றக் கரந்து ஒளித்தாய், என் முதல் தனி வித்தேயோ.
நல்வினை, தீவினை என அமைகிற இருவினைகளாக, உயிராக, வினைகளின் பயனாக, இந்த மூன்று உலகங்களிலும் முழுக்கப் பரவியிருக்கும் சம்சாரம் என்கிற புதராக, அந்தப் புதரிலே புகுந்து யாரும் அறியாதபடி ஒளிந்திருப்பவனாகத் திகழ்கிறவனே, என்னுடைய முதல் தனி வித்தே, (அனைத்துக்கும் முதலானவனே, என்னுடைய தனித்துவமான பேருயிராக உன்னைப் பெற்றேன், இனி விடுவேனா? (மாட்டேன்.)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.