தமிழர் அடிமையானது ஏன்? எவ்வாறு?-க.ப.அறவாணன்; பக்.334 ; ரூ.100; தமிழ்க்கோட்டம், 2, முனிரத்தினம் தெரு, அய்யாவு நாயுடு குடியிருப்பு, சென்னை-600 029.
தமிழர்கள் மற்றவர்க்கு அடிமையானது ஏன், எவ்வாறு என்ற இந்த நூலில் ஆசிரியர் க.ப. அறவாணன் ஆய்வாளர்களுக்கே உரிய பாங்குடன் தனது கருத்தை விரித்துரைக்கிறார். தமிழர்கள் கல்வி அறிவு இல்லாததாலும், பின்பற்றிய மதத்தாலும், பெண்ணடிமைக் கோட்பாட்டாலும், மன்னர்களுடன் தொடர்பில்லாததாலும், அநீதியை எதிர்த்துப் போராடாது அடங்கியமையாலும், தமிழ் மன்னர்களிடையே ஒற்றுமை இல்லாததாலும், காதல் மண வீழ்ச்சியாலும், வெள்ளை நிற மோகத்தாலும், ஆயுத பலவீனத்தாலும், புராதன வாகனங்களாலும், தகவல் தொடர்புக்கு வழி இல்லாததாலும் பிற இனங்களுக்கு அடிமைப்பட்டதாக ஆசிரியர் கூறுகிறார். இனியாவது தமிழர்கள், தங்களை ஏய்ப்பவர்களையே மீட்பர்கள் என்று கருதாமல் சுயநலத்தை விட்டு ஒற்றுமைப்பட்டு முன்னுக்கு வரமாட்டார்களா என்ற ஏக்கமே நூலின் இறுதியில் வெளிப்படுகிறது. மாணவர்கள், ஆசிரியர்கள் மட்டும் இன்றி தமிழ் உணர்வாளர்கள் அனைவருமே துய்க்க வேண்டிய நூல்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.