அயலகத் தமிழறிஞர்கள் - மு.இளங்கோவன்; பக்.200; |200.
"தமிழ் ஓசை' நாளிதழில் நூலாசிரியர் எழுதி கட்டுரையாக வெளிவந்த அயலகத் தமிழறிஞர்கள் பற்றிய 25 கட்டுரைகளின் தொகுப்பு. "திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்' நூலை எழுதிய இராபர்ட்டு கால்டுவெல் தொடங்கி போப் அடிகளார், அ.கி.இராமனுசன், சான் இரால்சுடன் மார், தனிநாயகம் அடிகளார், சுசுமு ஓனோ, ஈழத்துப் பூராடனார், ஜார்ச்சு ஹார்ட்டு, க.கைலாசபதி, கா.சிவத்தம்பி, பிரான்சு குரோ, தாமசு லேமான் என 30 அயலகத் தமிழறிஞர்களின் வரலாற்றைச் சுருக்கமாகத் தெரிந்துகொள்ள முடிவதுடன், அவர்கள் தமிழுக்கு ஆற்றியத் தொண்டையும் இந்நூல் வாயிலாக அறிந்துகொள்ள முடிகிறது. அயலகத் தமிழர்கள் பற்றி தகவல்களை இணையம் உள்பட பல்வேறு வழிகளில் தேடி இந்நூலை எழுதியுள்ள நூலாசிரியரின் உழைப்பை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
மேற்கண்ட இரண்டு நூல்களையும் வெளியிட்டோர்: வயல்வெளி பதிப்பகம்,இடைக்கட்டு; 9442029053.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.