ஸ்ரீரமண மகரிஷி

ஸ்ரீரமண மகரிஷி- பாலகுமாரன்; பக்.344; ரூ.160; விகடன் பிரசுரம், சென்னை-600 002; )044-4263 4283/ 84. பெரிய புராணத்தை அகத் தூய்மையோடு படித்து முடிப்போர் "தென்னாடுடைய சிவனே போற்றி' என்று சிவ பக்தியால் முணு
ஸ்ரீரமண மகரிஷி

ஸ்ரீரமண மகரிஷி- பாலகுமாரன்; பக்.344; ரூ.160; விகடன் பிரசுரம், சென்னை-600 002; )044-4263 4283/ 84.

பெரிய புராணத்தை அகத் தூய்மையோடு படித்து முடிப்போர் "தென்னாடுடைய சிவனே போற்றி' என்று சிவ பக்தியால் முணுமுணுப்பது உண்டு. அதுபோல் பாலகுமாரன் எழுதியுள்ள ஸ்ரீரமண மகரிஷியைப் படிப்போருக்கு "ரமணா.. ரமணா..' என்று பக்திப் பெருக்கால் உள்ளம் உருகும். திருவண்ணாமலையை ஒரு மண்டலம் கிரிவலம் வந்த மகிழ்வும் பூரிப்பும் மகிரிஷியின் இந்நூலைப் படித்து முடிக்கும்போது ஏற்படுகிறது. பக்தியோ, நாம சங்கீர்த்தனமோ, மந்திர ஜபமோ, யாக விஷயங்களோ, ஹடயோகமோ.. எதுவாக இருந்தாலும் மனத்தை அழித்து ஆன்மாவை தரிசிப்பதே முக்கியம் என்று ஸ்ரீரமணர் கூறுகிறார். என்ன வாழ்க்கை இது? நான் என்ன செய்து கொண்டிருக்கிறேன்? உண்மையில் நான் யார்? என்ற தாபம் எவருக்கு எழுந்தாலும் அவருக்கு மிக எளிதாக விடை தரக்கூடிய ஓர் இடம் பகவான் ஸ்ரீரமணரின் ஆஸ்ரமம் என்ற பேருண்மையை பாலகுமாரன் எடுத்துரைத்திருக்கிறார். தமிழகத்தில் பிரசித்திபெற்ற தலங்கள் பலவற்றிலும் இறைவனின் மூர்த்தங்கள் சுயம்புவாகவே வெளிப்பட்டுள்ளன. அதேபோல் ஸ்ரீரமணரும் ஒரு சுயம்பிரகாசர்.. சுயம்பு. அவர் யாருக்கும் சீடராக இருந்ததில்லை. அவருக்கும் குரு என்ற ஸ்தானத்தில் யாரும் இருந்ததில்லை. அண்ணாமலை ஈசனே அவருக்கு எல்லாம் வல்ல மகா குரு. இந்நூலைப் படிப்போர் அதைத் தெளிவாக புரிந்து கொள்வர். சுருக்கமாகச் சொன்னால் ஸ்ரீரமண மகரிஷி - ஓர் ஆன்ம தரிசனம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com