பாகசாலை

பாகசாலை-பாலகுமாரன்; பக்.246; ரூ.135; விசா பப்ளிகேஷன்ஸ், சென்னை-17; )044-24342899 யாகம் வளர்ப்பது யாகசாலை என்பது நமக்கெல்லாம் தெரியும். அது என்ன பாகசாலை? "பக்குவப்படுத்துவது பாகசாலை. பக்குவப்படுகின்ற இ
பாகசாலை

பாகசாலை-பாலகுமாரன்; பக்.246; ரூ.135; விசா பப்ளிகேஷன்ஸ், சென்னை-17; )044-24342899

யாகம் வளர்ப்பது யாகசாலை என்பது நமக்கெல்லாம் தெரியும். அது என்ன பாகசாலை? "பக்குவப்படுத்துவது பாகசாலை. பக்குவப்படுகின்ற இடமாக இருப்பது குருவின் இருப்பிடம். பல் தேய்ப்பது, உடை உடுத்துவது, உண்பது, உறங்குவது போன்றவற்றை அவர் பல்வேறு விதமாகப் பண்படுத்தி உச்சகட்டமாக உள்ளுக்குள்ளே இருக்கின்ற கனலைத் தூண்டி எழுப்புவார்; தன்னை அறியச் செய்வார்' என்கிறார் பாலகுமாரன்.

"படிச்சு பட்டம் வாங்கி பெரிய வேலைக்குச் சேர்ந்து கல்யாணம் பண்ணி, குழந்தைகள் பெத்து சமூகத்தில் உயர்ந்த மனிதனா... இந்த வாழ்க்கை முறை அனைவரும் விரும்புவதும், முயன்றால் எளிதில் வசப்படக்கூடியதுதான். ஆனால், சுகமான இந்த வாழ்க்கையை உதறிவிடவும், அகந்தையை துறந்து வேஷதாரி இல்லாத நிஜத் துறவியாவதும் எத்தனை பேருக்கு சாத்தியம்? இருட்டான அறியாமையிலிருந்து வெளிச்சமான, அதாவது வாழ்க்கையை உலுக்குகின்ற கேள்விக்குப் பதில் சொல்லும் அறிவுக்கு நம்மை அழைத்துச் செல்லும் குரு, நமக்கு அத்தனை எளிதில் கிடைப்பாரா?' - இக்கேள்விகளை நம்முள் எழுப்பும் இந்த நாவல் அது சாத்தியமில்லாத விஷயம் இல்லை என்பதையும் சுட்டுகிறது.

தங்கும் விடுதியுடன் கூடிய பள்ளியில் படிக்கும் மாணவன் பிரசன்னாவுக்கும், பத்தாம் வகுப்பு ஆசிரியர் சுவாமிநாத சர்மாவுக்குமான உரையாடலாக நகர்கிறது கதை. கட்டாய ஆழ்ந்த வாசிப்பு அவசியமான இந்தப் படைப்பில் தொடக்க அவஸ்தையைப் பொருட்படுத்தாது, மூழ்கிவிட்டால் வாசகனுக்கு நல்முத்துகள் நிறையவே கிடைக்கும்.

"புரிந்து கொள்ள சிலருக்கு முடியவில்லை. பலருக்கு சில ஜென்மங்கள் தேவைப்படுகிறது. அதற்காக சொல்லாமல் இருக்கக் கூடாது. யாருக்கோ புரியும் என்ற நம்பிக்கையில் ஏதேனும் இங்கு சொல்லித்தான் ஆகவேண்டும்' என்பது நூலாசிரியர் வாதம். நாவலைப் படித்து விட்டு உங்களைப் பற்றி அறிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள் என்கிறார். நீங்களும் முயற்சி செய்துதான் பாருங்களேன்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com