மார்க்சிய ஞானி ஆர்.கே. கண்ணன்

மார்க்சிய ஞானி ஆர்.கே. கண்ணன் - மு. பரமசிவம் ; பக்.96 ; ரூ.70; நியு செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், சென்னை-98; )044-26258410. பல அறிஞர்கள் தங்கள் திறமைக்கும் தகுதிக்கும் உரிய அங்கீகாரத்தைப் பெறாமலேயே க
மார்க்சிய ஞானி ஆர்.கே. கண்ணன்

மார்க்சிய ஞானி ஆர்.கே. கண்ணன் - மு. பரமசிவம் ; பக்.96 ; ரூ.70; நியு செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், சென்னை-98; )044-26258410.

பல அறிஞர்கள் தங்கள் திறமைக்கும் தகுதிக்கும் உரிய அங்கீகாரத்தைப் பெறாமலேயே காணாமல் போகிறார்கள். அப்படிப்பட்டவர்களில் ஒருவர் ஆர்.கே. கண்ணன். அவரைக் கம்யூனிஸ்ட் உலகில் அனைத்து தலைவர்களுக்கும் நன்கு தெரியும். ஆனால் அவர் சாதாரண மனிதர்களிடையே - மற்றும் ஒருவர்.

சிறந்த ஆங்கிலப் புலமையும் உள்ளவர். "ஜனசக்தி'யில் பல காலம் பணியாற்றியவர். மாஸ்கோவில் இருந்துகொண்டு பல நல்ல நூல்கள் தமிழில் வெளிவரக் காரணமானவர். சிறந்த விமர்சகர். ஆனாலும் வாழ்வின் பல கட்டத்திலும் வறுமைதான் கோலோச்சியது என்றால்...

1963-ல் தோழர் ஜீவா இறந்துவிட்டார். அஞ்சலி செலுத்த ஆர்.கே.கே. போக முடியவில்லை. காரணம், உடைந்துபோன கண்கண்ணாடிக்குப் பதிலாக வேறு ஒன்று வாங்க கையில் காசில்லை. கண்கண்ணாடி இல்லாமல் தெருவில் நடக்கவே இயலாது. வீட்டுக்குள்ளேயே ஜீவா மறைவுக்கு அழ மட்டுமே முடிந்தது என்றால், அந்த வறுமையின் கொடுமையை என்னவென்பது! 1992-ல் ஆர்.கே.கே இறக்கும் வரை அவரது வறுமை சாகவில்லை.

ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக பொதுவாழ்வில் இருந்தவர். ஒரு படத்தொகுப்பு போட்டிருக்கலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com