ஓஷோ 1000 (ஒரு ஞானியின் தீர்க்க தரிசனம்) - தொகுப்பு: மு.அப்பாஸ் மந்திரி; பக்.272; ரூ.100; நர்மதா பதிப்பகம், தி.நகர், சென்னை-17; )044-2433 4397.
ஓஷோ ரஜனீஷ் என்னும் தத்துவஞானி தன் சீடர்களுக்கு மத்தியில் ஆற்றிய சொற்பொழிவுகளின் இடையிடையே கூறப்பட்ட தத்துவ முத்துக்கள் மட்டும் பிரித்தெடுக்கப்பட்டு தொகுக்கப்பட்டுள்ளன.
"தேடுவதை நிறுத்துங்கள் தேடுவது கிடைக்கும்' என்பதில் தொடங்கி, "உங்களது சொந்த வெற்றியில் ஆர்வமாக இருப்பது போன்று, மற்றவர்களது வெற்றியிலும் ஆர்வமாக இருங்கள்; எவையெல்லாம் உங்களுக்கு ஆணவ உணர்ச்சியைக் கொடுக்கிறதோ... அவையெல்லாம் உங்கள் முன்னேற்றத்தின் தடைகள். எவையெல்லாம் உங்களுக்கு ஆணவ உணர்ச்சியைக் கொடுக்கவில்லையோ, அவையெல்லாம் உங்களை முன்னேற்றிச் செல்லும் பாதைகள்; இந்தக் கணத்தை நாம் மகிழ்ச்சியுடையதாக மாற்றிக் கொண்டால், அடுத்து வரும் கணத்தையும் நாம் சந்தோஷமாக ஆக்கிக்கொள்ளும் சந்தர்ப்பம் அதிகம் நமக்குக் கிடைக்கும்; அன்பு ஒன்றுதான் தெய்வீகத்தை நோக்கி எடுக்குவைக்கும் முதல் அடி. சரணாகதிதான் கடைசி அடி. இரண்டு அடிகள்தான் நம் வாழ்க்கையின் முழுப் பயணமும்; ஒவ்வொரு கணத்தையும் இதுவே கடைசி கணம் என்பதைப் போல எண்ணி வாழுங்கள். யாருக்குத் தெரியும், இதுவே வாழ்வின் கடைசி கணமாகவும் இருக்கலாம்' - இத்தகைய வாழ்க்கைக்கு அவசியமான ஓஷோவின் சிறந்த தத்துவ மொழிகள் ஆயிரம் இந்நூலில் உள்ளன. மிகச் சிறந்த தொகுப்பு. தினமும் ஒரு முறையாவது புரட்டிப் பார்க்க வேண்டிய "நன்'னூல்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.