அகமும் புறமும் (தமிழ்நேயம் இதழிலிருந்து)

அகமும் புறமும் (தமிழ்நேயம் இதழிலிருந்து) - கோவை ஞானி; பக்.256; ரூ.200; புதுப்புனல், சென்னை-5; )044 - 4356 7035.
Published on
Updated on
1 min read

அகமும் புறமும் (தமிழ்நேயம் இதழிலிருந்து) - கோவை ஞானி; பக்.256; ரூ.200; புதுப்புனல், சென்னை-5; )044 - 4356 7035.

கோவை ஞானி நடத்தி வரும் தமிழ்நேயம் இதழில் வெளியான அகமும் புறமும் கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். சமூகத்தின், அரசாங்கத்தின் ஒவ்வொரு நடவடிக்கையிலும் கோவை ஞானியின் எதிர்வினைகள், கவலைகள், கோபம், நம்பிக்கை, மகிழ்ச்சி எல்லாவற்றின் கலவைதான் அகமும் புறமும். இந்தத் தொகுப்பில் இடம்பெறுபவை 2005-க்கு முந்தைய கட்டுரைகள் என்றாலும், அவர் குறிப்பிட்டுள்ள பிரச்னைகள் இன்றும் இருக்கின்றன. முன்னிலும் அதிகமாகி இருக்கின்றனவே தவிர, மறைந்துவிடவில்லை. ஒவ்வொரு பிரச்னையையும் அவர் அணுகும் விதம், நீறுபூத்த சிந்தனைக்கு ஊதுகுழல்!

அவரை சந்தித்துப் பேசியிருக்காதவர்களுக்கு இது அச்சுப் புத்தகம். அவரிடம் நேரில் பேசியிருப்பவர்களுக்கு இது ஒரு பேசும் புத்தகம். கோவை ஞானி சொல்லச் சொல்ல உதவியாளர் எழுதுகிறார், அச்சில் வருகிறது. அவருடன் பேசிப் பழகியவர்கள் இந்தப் புத்தகத்தைப் படிக்கும்போது, ஞானி அதே ஏற்ற இறக்கங்களுடன் நம்முன் பேசுவதை உணர முடியும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com