நாளும் நாளும் நல்லாசிரியர்

நாளும் நாளும் நல்லாசிரியர் - வெ.கணேசன்; தமிழில்: வீ.கே.கார்த்திகேயன்; பக்.408; ரூ.250; நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், சென்னை-98; )044 - 2625 8410.
Published on
Updated on
1 min read

நாளும் நாளும் நல்லாசிரியர் - வெ.கணேசன்; தமிழில்: வீ.கே.கார்த்திகேயன்; பக்.408; ரூ.250; நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், சென்னை-98; )044 - 2625 8410.

ஆசிரியர்கள் எதிர்கால தலைமுறையை உருவாக்குபவர்கள். மிகவும் வேகமாக மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கும் இக்காலத்தில், ஆசிரியர்கள் தங்களை நாள்தோறும் வளர்த்துக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு நாளும் ஆசிரியர்கள் தங்களை உயர்த்திக் கொள்வதற்கு உரிய சிந்தனைகளை இந்நூலின் மூலமாக வழங்குகிறார் நூலாசிரியர்.

"வகுப்பில் பாடம் நடத்தத் தொடங்குவதற்கு முன் ஒரு நிமிடம் அமைதியாக இருந்துவிட்டுப் பிறகு தொடங்கவும். ஏனென்றால் அமைதியாயிருப்பது, அமைதியற்ற மனத்தை அமைதிப்படுத்தும்'.

"வாய்ப்புகள் கிடைக்கின்றபோதெல்லாம் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். படிப்பு உங்களை வெற்றியாளராக்கும். புத்தகப் படிப்பில்லாமல் போனால் நமது பணி சிறக்காது.'

"நீங்கள் திசைகாட்டும் கருவிபோலச் செயல்படுங்கள் என்பது நாம் செல்லும் திசையை நோக்கிய ஒருமுகச் சிந்தனையை வளர்க்கச் சொல்லப்படும் வாசகம்... திசை மாறாமல் நாம் சென்று அடைய வேண்டிய இடத்தைச் சுட்டிக்காட்டி நினைவூட்டிக் கொண்டே இருக்கும் தன்மையுடையது திசைகாட்டும் கருவி'.

இப்படி நல்ல சிந்தனைகளை ஒவ்வொரு நாளும் ஆண்டு முழுவதும் சிந்திக்க உதவும் வகையில் தொகுத்தளித்திருக்கும் அருமையான நூல். ஆசிரியர்களுக்கு மட்டுமல்ல, அனைவருக்கும் பயன்படும் நூல்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com