வரலாற்றில் விழுப்புரம் மாவட்ட ஊர்கள்

வரலாற்றில் விழுப்புரம் மாவட்ட ஊர்கள் - கோ.செங்குட்டுவன்; பக்.258; ரூ.200; பி.எஸ்.பப்ளிகேஷன், 20-5.சி.கந்தசாமி லே -அவுட், 2 வது தெரு, கன்னியாகுளம் சாலை, விழுப்புரம்-605 046.
Published on
Updated on
1 min read

வரலாற்றில் விழுப்புரம் மாவட்ட ஊர்கள் - கோ.செங்குட்டுவன்; பக்.258; ரூ.200; பி.எஸ்.பப்ளிகேஷன், 20-5.சி.கந்தசாமி லே -அவுட், 2 வது தெரு, கன்னியாகுளம் சாலை, விழுப்புரம்-605 046.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 50 ஊர்களின் வரலாற்றுப் பெருமைகளைக் கூறும் நூல்.

வீரமரணம் எய்தியவர்களுக்கு நடுகல் எடுக்கும் வழக்கம் தமிழகத்தில் இருந்தது. ஆனால் விலங்குகளுக்கும், அதுவும் கோழிக்கு நினைவுக்கல் அரசலாபுரம் என்ற ஊரில் எடுக்கப்பட்டுள்ளது.

எண்ணாயிரம் என்ற ஊரைச் சேர்ந்த சமணர்கள்தான் மதுரையில் கூன் பாண்டியன் ஆட்சிக் காலத்தில் நாலடியாரை இயற்றினார்கள். திண்டிவனம் பேருந்து நிலையத்தின் பின்புறம் பரந்து விரிந்து காணப்படுகிறது கிடங்கில் ஏரி. இது, கி.பி.13 ஆம் நூற்றாண்டில் பனைப்பூங்கிழார் தம்பி குமரன் என்பவரால் வெட்டப்பட்டதாகும்.

கூனிமேடு என்ற கிராமம், "சின்ன குவைத்', "சின்ன சிங்கப்பூர்' என்றெல்லாம் அழைக்கப்படுகிறது. காரணம், இங்கு வசிக்கும் பெரும்பாலான ஆண்கள் வேலை பார்ப்பது வெளிநாட்டில்தான். இவர்களுக்காகவே 25 ஆண்டுகளுக்கு முன்பு இங்கு தனி தொலைபேசி இணைப்பகம் தொடங்கப்பட்டது.

கிராமத்தின் வரலாறு, அங்கே கிடைத்த கல்வெட்டு, பாறை ஓவியங்கள் என்ற எல்லைக்குள் சுருங்கிவிடாமல், இவை போன்ற பல சுவையான தகவல்களோடு சொல்லப்பட்டுள்ளது. வரலாற்று நூல் என்றால் முகம் சுளிப்பவர்கள் தங்கள் கருத்தை இந்நூலைப் படித்தால் மாற்றிக் கொள்வார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com