வைரமுத்து ஒரு பல்கலைக்கழகம்

வைரமுத்து ஒரு பல்கலைக்கழகம் - காவ்யா சண்முகசுந்தரம், தே.ஞானசேகரன்; பக்.1424; ரூ.1400; காவ்யா, சென்னை-24; )044- 2372 6882.
Published on
Updated on
1 min read

வைரமுத்து ஒரு பல்கலைக்கழகம் - காவ்யா சண்முகசுந்தரம், தே.ஞானசேகரன்; பக்.1424; ரூ.1400; காவ்யா, சென்னை-24; )044- 2372 6882.

பி.எச்டி. மற்றும் எம்.ஃபில் பட்டங்களுக்காக ஆய்வு மேற்கொள்ளப்பட்ட கவிஞர் வைரமுத்துவின் 60 படைப்புகள் பற்றிய ஆய்வேடுகளின் தொகுப்பே இந்நூல்.

கவிஞரின் முதல் கவிதைத் தொகுப்பான வைகறை மேகங்களில் தொடங்கி அவருடைய சிறந்த படைப்புகள் பலவும் ஆய்வு செய்யப்பட்டுள்ளன.

இவை தவிர, வைரமுத்துவின் பாடல்களில் சங்க இலக்கியத்தாக்கம், மார்க்சீய தாக்கம், நாட்டுப்புறப் பாடல்கள் தாக்கம் என்றும், சிற்பி, மு.மேத்தா கவிஞர்களோடு ஒப்பிட்டும் ஆய்வுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்நூலிலுள்ள எல்லாப் படைப்புகளுமே ஏற்கெனவே படிக்கப்பட்டவையாகயிருப்பினும் அவற்றுள் தேர்ந்தெடுத்த பகுதிகளை மீண்டும் ஒரு சேரப் படிப்பதென்பது ஒரு சுகமான வாசிப்பனுபவத்தைத் தருகிறது.

"கடலை எரித்த தீக்குச்சி', "தண்ணீர் பந்தல் தீப்பற்றி விட்டது' போன்ற முரண்பாட்டு உவமைகளும், "அத்தனை எழுத்தையும் ஆயுத எழுத்தாய் மாற்றியவன்' என்று பாரதியையும், "தமிழென்னும் கடலுக்குள் தரை வரைக்கும் போனவன்' என்று கம்பனையும் வியந்து நோக்குவதும் வைரமுத்துவின் ரசிக்கத் தகுந்த சொல்லாட்சிகளுக்கு எடுத்துக்காட்டுகள்.

ஒரு படைப்பாளியின் அறுபது படைப்புகள் ஆய்வு செய்யப்பட்டு அவை ஒரு தொகுப்பு நூலாக வெளிவருவது தமிழுலகுக்குப் புதிது. ஆய்வாளர்கள் குறித்த சிறு குறிப்பு இடம் பெற்றிருக்கலாம்.

அட்டை முதல் அட்டை வரை அப்படி ஒரு நேர்த்தி. ஆயினும் பொருளடக்கத்தில் குறிப்பிட்டுள்ளவாறு இல்லாது பக்க எண்கள் மாறுபட்டிருப்பதும், ஆங்காங்கே காணப்படும் அச்சுப் பிழைகளும் கவிஞர் வைரமுத்து தொடர்புடைய ஒரு நூலிலா? நம்ப முடியவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com