உறங்கும் மனசாட்சி - ஆ.தமிழ்மணி; பக்.246; ரூ.140; மந்திரச்சிமிழ் பதிப்பகம், சென்னை-73; )044- 2366 3847.
தினமணி, ஜனசக்தி நாளிதழ்கள், புதிய பார்வை உள்ளிட்ட பல இதழ்களில் வெளிவந்த 52 கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல்.
சமகாலப் பிரச்னைகளைப் பற்றி இந்நூலில் உள்ள அனைத்துக் கட்டுரைகளும் அலசி ஆராய்கின்றன. நீர்வளத்தை எப்படிப் பாதுகாப்பது? கிரிக்கெட் விளையாட்டு அணியைப் பெரிய நிறுவனங்கள் விலைக்கு வாங்குவது சரியா? வியாபாரமயமான கல்விமுறையை மாற்றி அமைப்பது எப்படி? எனப் பல்வேறு சமகாலப் பிரச்னைகளுக்குத் தெளிவான தீர்வுகளை நூலாசிரியர் முன் வைக்கிறார்.
ஈராக் பிரச்னை பற்றிய கட்டுரையில், "ஈராக்கில் அமைதி என்பது அங்கு வாழும் அனைத்து இன மக்கள் சார்ந்த ஒன்று. அதை வல்லாதிக்க நாடுகள் தீர்மானிக்க முடியாது' என்று உறுதியாகக் கூறுகிறார்.
"உணவு விஷமானால்?' என்ற கட்டுரையில் "தற்போது விவசாயம் என்பது பன்னாட்டு வணிகக் கும்பலின் விளையாட்டுக் களமாகிவிட்டது. ரசாயன உரங்களின் பயன்பாடு விவசாயத்தில் தவிர்க்க இயலாத ஒன்றாக மாறிவிட்டது' என்று கூறுகிறார். நம்மைச் சுற்றியுள்ள உலகின் பல்வேறு பிரச்னைகளைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் நூல்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.