பிரபலமானவர்களின் வெற்றி ரகசியங்கள்- ஜி. மீனாட்சி; பக்.152; ரூ.100; திருவரசு புத்தக நிலையம், சென்னை-17; 044-2434 2810.
பிரபலங்கள் யார்? அந்த நிலையை அடைய அவர்கள் கடந்து வந்த பாதைதான் என்ன? பிரபலமானால் மட்டும் போதுமா?- என்பது தொடர்பாக பல்வேறு துறைகளில் பிரபலமாக உள்ள 25 பேரை நேரடியாகச் சந்தித்து எடுக்கப்பட்ட நேர்காணல்களின் தொகுப்பு.
முதலாவது கட்டுரை பாடகர் கே.ஜே. யேசுதாஸ் பற்றியது, தான் இன்று பிரபலமானாலும், சாதி சங்கங்கள், கட்சிகளிலோ சேராதே, படிப்பு, திறமையில் உன்னைவிட உயர்வான இடத்தில் இருக்கறவங்களைப் பார்; பண விஷயத்துல உன்னைக் காட்டிலும் ஏழ்மை நிலையிலிருக்கறவங்களைப் பார்" என எனது தந்தையார் கூறிய வேத மந்திரத்தை இன்றளவும் பின்பற்றுவதாகவும், அதுவே தனது வெற்றி மந்திரம் என்கிறார்.
'உண்மைகளை ஓங்கிச் சொல்ல எனக்குத் தைரியம் இருக்கிறது"-என வைரமுத்துவின் பேட்டியும் அருமை.
"அரசு விருது கிடைக்கலையே' என்ற பரவை முனியம்மாவின் பேட்டி, முஸ்லிம் பெண்ணாகப் பிறந்து தமிழின்பால் கொண்ட ஆர்வம் காரணமாக, இன்று உலக அளவில் பிரபலமாகியிருக்கும் மேடை பேச்சாளர் பர்வீன் சுல்தானா பேட்டி, சென்னை கலாúக்ஷத்ராவின் தனஞ்ஜயன்-சாந்தாவின் நாட்டிய தம்பதிகள், பெண் உரிமைக்காகப் போராடும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் உ.வாசுகி, பட்டிமன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கர், இலக்கியவாதி தமிழருவி மணியன், சுற்றுச்சூழல் ஆர்வலர் "ஓசை' காளிதாஸ் உள்ளிட்ட பிரபலங்களின் பேட்டிகளும் இந்நூலில் அடக்கம்.
பத்திரிகைகளில் இந்த நேர்காணல்கள் வெளி வந்திருந்தாலும், புத்தக வடிவில் வெளிவந்திருப்பது ஒரு வரப்பிரசாதம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.