ஆலவாயழகன்

ஆலவாயழகன்-ஜெகசிற்பியன்; பக்.472; ரூ.175; வானதி பதிப்பகம், சென்னை-17; 044-2434 2810.

ஆலவாயழகன்-ஜெகசிற்பியன்; பக்.472; ரூ.175; வானதி பதிப்பகம், சென்னை-17; 044-2434 2810.

பிரபல வார இதழில் அரைநூற்றாண்டுக்கும் முன்னதாக தொடராக வெளியான சரித்திர நாவல். அரசியல் ஞானமும், வீர உணர்ச்சியும், விவேக சிந்தையும்,அறநெறிப் பண்பும், இறை பக்தியும், தமிழ்ப் பற்றும் ஒருங்கே கொண்டவன் முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன். சோழப் பேரசை வீழ்த்திப் பாண்டியப் பேரரசை உதயமாக்கிய அந்த மாவீர இளைஞனே கதையின் நாயகன். சோழ இளவரசி நல்லினி என்னும் அருள்மொழி, மாறவர்மனின் காதலி. தந்தையை இழந்தாள், தாயைப் பிரிந்தாள், சகோதரன் சிறை புகவும், நானூறு ஆண்டுகளாக நிலைத்து நின்ற சோழ சாம்ராஜ்ய சரிவுக்கும் காரணம் என்ற பழிச் சொல்லுக்கும் ஆளானாள். தமிழ் மீது அளவற்ற காதல் கொண்ட அவள் பட்டினப்பாலை பாடிய உருத்திரங் கண்ணனாருக்கு சோழன் கரிகாற் பெருவளத்தான் பரிசாக அளித்த பதினாறுகால் மண்டபம், பாண்டிய படைகளால் இடிபடுவதை தனது உயிரையும் பொருட்படுத்தாது காத்து நின்றாள். "எண்ணுளே இருந்த போதும் யாவரென்று தேர்கிலேன், கண்ணுளே இருந்த போதும் என்கொல் காண்கி லாதவே!' என்ற தனது தேனிசைப் பாடலால் மாறவர்மன் உள்ளத்தைக் கொள்ளை கொண்ட அருள்மொழியின் காதல் கைகூடியதா? பாண்டியனின் பட்டத்தரசியானாளா என்பதுதான் கதை. புத்த துறவி அன்பானந்த கௌஸாம்பி, மழவச் சக்கரவர்த்தி, காங்கேயன், தன் மைத்துனன் என்று மாறவர்மனே கல்வெட்டில் புகழ்ந்து குறிப்பிட்டுள்ள அழகப் பெருமாள் உள்ளிட்ட பாத்திரங்களும் கச்சிதம்.

சரித்திர நாவல்களுக்கே உரிய விறுவிறுப்புக்கு முப்பத்தேழு அத்தியாயங்களிலும் பஞ்சமில்லை. நூலாசிரியரின் நடை நயம், நாவலை ஒரே மூச்சில் வாசிக்க வைக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com