நேருவின் ஆட்சி - பதியம் போட்ட 18 ஆண்டுகள்

நேருவின் ஆட்சி - பதியம் போட்ட 18 ஆண்டுகள் - ரமணன்; பக்.152; ரூ.115; சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், சென்னை-17; )044-2434 2771.
Published on
Updated on
1 min read

நேருவின் ஆட்சி - பதியம் போட்ட 18 ஆண்டுகள் - ரமணன்; பக்.152; ரூ.115; சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், சென்னை-17; )044-2434 2771.

சுதந்திர இந்தியாவில் மக்களின் மனங்களில் நிறைந்திருக்கும் தலைவர்களில் மகாத்மா காந்திக்கும், பண்டித ஜவஹர்லால் நேருவுக்கும் முக்கியமான இடம் உண்டு. காந்தியைக் கூட இந்த நாடு விமர்சனத்துக்கு உட்படுத்தியது என்றால், அரசியல்வாதியான நேருவைப் பற்றி கேட்கவே வேண்டாம்.

நேரு, நாடு சுதந்திரம் பெற்ற 1947 முதல் அவர் இறந்த 1964 வரையில் பிரதமராகப் பதவி வகித்தார். அந்த 17 ஆண்டு காலத்தில் நாட்டை வடிவமைத்த சிற்பி அவர். என்றாலும், அவரின் செயல்கள் அனைத்தும் இன்று வரை விமர்சிக்கப்பட்டு வருகின்றன. அந்த விமர்சனங்களின் உண்மைத் தன்மையை அறிந்து கொள்ள உதவும் வகையில் இந்த நூல் அமைந்துள்ளது.

இந்தியாவுக்கு இரவில் சுதந்திரம் வழங்கப்பட்டது ஏன்? என்ற கேள்விக்கு புத்தகத்தில் விடை உள்ளது. மாட்சிமை தங்கிய பிரிட்டிஷ் தேசியக் கொடி இறக்கப்படும் அதேவேளையில் இந்திய தேசியக் கொடி ஏற்றப்படுவதை விரும்பாததால், வழக்கமாக மாலையில் பிரிட்டிஷ் கொடி இறக்கப்பட்ட பின்பு இரவில் இந்திய தேசியக் கொடியை ஏற்றும் மவுண்ட் பேட்டனின் யோசனைக்கு அவரது நண்பரான நேரு சம்மதித்தார் என்ற தகவல் நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சி இன்றுதான் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி உள்ளது என்பதல்ல. சுதந்திர இந்தியாவின் முதல் ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான கட்சியும் அதுவே. முந்த்ரா ஊழல் நேருவின் மருமகன் பெரோஸ் காந்தியாலேயே நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்டது. பிரதமரான நேரு தர்மசங்கடத்துக்கு ஆளானர். உண்மையில் "விஞ்ஞான பூர்வமான ஊழல்' அந்த முந்த்ரா ஊழல்தான் என நூலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேரு இறந்தபோது அன்றைய ஜனசங்கத் தலைவரான முன்னாள் பிரதமர் வாஜ்பாய் எழுதிய இரங்கல் கவிதையுடன் நூல் நிறைவடைவது முத்தாய்ப்பான ஓன்று.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com