இணைந்த மனம்
By க்ருஷாங்கினி | Published On : 01st April 2019 02:06 AM | Last Updated : 01st April 2019 02:06 AM | அ+அ அ- |

இணைந்த மனம் - மிருதுலா கர்க்; தமிழில்: க்ருஷாங்கினி; பக்.512; ரூ.395 ; சாகித்திய அகாதெமி, சென்னை-18; 044- 2431 1741.
சுதந்திரத்துக்குப் பிறகு இந்தியாவில் நிகழ்ந்த மாற்றங்கள், அது நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த மனிதர்களின் மீது ஏற்படுத்தும் தாக்கங்கள் இந்நூலில் பதிவாகியுள்ளன. கதாநாயகி குல்மோஹர், அவளுடைய தங்கை மோகரா, இந்த இருவரின் தோழி ஆகியோருக்கிடையிலான உரையாடல்களின் மூலம் நாவல் சொல்லப்படுகிறது.
மனிதர்களுக்கிடையிலான உறவுகள், முரண்பாடுகள், எதிர்பார்ப்புகள், ஏமாற்றங்கள், சிறுவயதில் உள்ள மனிதர்கள் காலப்போக்கில் மாறிவிடுவது, அவர்கள் மீது ஏற்றி வைக்கப்பட்ட பிம்பங்கள் கலைந்து போவது இந்நாவில் மிக யதார்த்தமாக சித்திரிக்கப்பட்டுள்ளது. குல்மோஹர் சிறுபெண்ணாக இருந்ததில் தொடங்கி, அவள் ஒரு மனுஷியாக, காதலியாக, படைப்பாளியாக, ஒருவரின் மனைவியாக பலவிதங்களில் அவள் மாறிவிடுவதும், வாழ்க்கை இவ்வாறு பலரின் வாழ்க்கையை மாற்றிவிடுவதையும் நம் கண்முன் கொண்டு வந்து நிறுத்துகிறது இந்நூல்.
சாகித்திய அகாதெமி விருதுபெற்ற மிருதுலா கர்க் எழுதிய மிகச் சிறந்த படைப்புகளுள் ஒன்றான இதைப் படிக்கும்போது, மொழிபெயர்ப்பு என்ற உணர்வு சிறிதும் ஏற்படாமல் இருப்பது சிறப்பு.