தொடக்க காலத் தமிழ் நாவல்கள்

தொடக்க காலத் தமிழ் நாவல்கள் - சுப்பிரமணி ரமேஷ்; பக்.248; ரூ.200; மேன்மை வெளியீடு, சென்னை-14; 044-2847 2058.
தொடக்க காலத் தமிழ் நாவல்கள்

தொடக்க காலத் தமிழ் நாவல்கள் - சுப்பிரமணி ரமேஷ்; பக்.248; ரூ.200; மேன்மை வெளியீடு, சென்னை-14; 044-2847 2058.

"மேன்மை' இதழில் வெளியான கட்டுரைகளின் தொகுப்பு. 1879-இல் வெளியான பிரதாப முதலியார் சரித்திரத்தில் தொடங்கி, 1952-இல் வெளியான ந.சிதம்பர சுப்ரமணியத்தின் "இதய நாதம்' வரைக்குமான 25 நாவல்களை எழுதிய ஆசிரியர்கள் பற்றியும் அந்நாவல்கள் எழுந்த சூழலையும், அந்நாவல்களில் சொல்லப்பட்டிருக்கும் செய்திகளையும் இந்நூல் விரித்துரைக்கிறது.

1888-இல் திரிசிபுரம் சு.வை.குருசாமி சர்மா எழுதி, 1893-இல் வெளியான "பிரேமகலாவத்யம்'; தமிழின் இரண்டாவது நாவலான பி.ஆர். ராஜமய்யரால் எழுதப்பட்ட "கமலாம்பாள் சரித்திரம்', மூன்று பெண்களின் கதையைச் சொல்லும் அ.மாதவையா எழுதிய "பத்மாவதி சரித்திரம்',  புனைகதை வளர்ச்சிக்குக் குறிப்பிடத்தக்க பங்களிப்பு நல்கிய ச.ம.நடேச சாஸ்திரி எழுதிய "தீனதயாளு',    டி.பி.இராஜலட்சுமி எழுதிய முதல் நாவலான "கமலவல்லி அல்லது டாக்டர் சந்திரசேகரன்',   மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் எழுதிய "தாசிகள் மோசவலை அல்லது மதிபெற்ற மைனர்', மு.வ.வின் "கள்ளோ காவியமோ?' - என நூறு ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான அற்புதமான நாவல்களின் இந்த மீள் பார்வை, மிகுந்த ஆழங்காற்பட்ட பார்வை.

"நாவல்' எனும் இலக்கிய வடிவம்  குறித்த புரிதல்களை ஏற்படுத்துவதுடன், அது காலப்போக்கில் அடைந்த வளர்ச்சியையும் எடுத்துரைக்கிறது.

"இந்நூல் நாவல் வரலாறு இல்லை. 1879-1952 காலகட்டத்தில் வெளிவந்த இருபத்தைந்து நாவல்கள் குறித்த அறிமுகம்; கருத்துரை, மதிப்புரை, கொஞ்சம் விமர்சனம் என்று சொல்லலாம். இந்நாவல்களை அவை எழுதப்பட்ட காலத்திற்குச் சென்று விமர்சனங்களாகக்கூட எடுத்துக்கொள்ளலாம்' என்ற நூலாசிரியரின் பதிவு, பக்கத்துக்குப் பக்கம் பிரதிபலிக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com