இலக்கியச் சங்கமம்

உரத்த சிந்தனை வாசக எழுத்தாளர்கள் சங்கம் நடத்தும் பாரதி உலா.தலைமை: சேது குமணன்; பங்கேற்பு: டெல்லி கணேஷ், உதயம்ராம், த.இராதாகிருஷ்ணன், நெல்லை சு.முத்து, ஆர்.அப்துல்சலாம்;

உரத்த சிந்தனை வாசக எழுத்தாளர்கள் சங்கம் நடத்தும் பாரதி உலா.தலைமை: சேது குமணன்; பங்கேற்பு: டெல்லி கணேஷ், உதயம்ராம், த.இராதாகிருஷ்ணன், நெல்லை சு.முத்து, ஆர்.அப்துல்சலாம்; சேதுபாஸ்கரா வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், விசாலாயன்கோட்டை, காரைக்குடி; 21.11.19 காலை 9.45.

சாகித்திய அகாதெமி நடத்தும் "எனது பார்வையில்' - இலக்கிய நிகழ்ச்சி. "சுந்தர ராமசாமியின் வாழ்க்கையும் இலக்கியமும்' குறித்த சொற்பொழிவு; பங்கேற்பு: சா.கந்தசாமி; சாகித்திய அகாதெமி, குணா வளாகம், இரண்டாம் தளம், 443, அண்ணாசாலை, தேனாம்பேட்டை, சென்னை-18; 21.11.19 மாலை 5.30.

நண்பர்கள் குடும்ப நற்பணி மன்றம் நடத்தும் பட்டிமன்றத் திருவிழா. 22.11.19 மாலை 3.00; பங்கேற்பு: கா.நித்யானந்தம், செந்தமிழ்த்தாசன்; 23.11.19 மாலை 3.00; பங்கேற்பு: ந.பாபு, வே.எழிலரசு; 24.11.19 மாலை 3.00; பங்கேற்பு: கா.ச.கஜேந்திரன், பொன்னரசன், ம.வான்மதி, மயிலாடுதுறை இளையபாரதி; டேவிட் சாங் மேனிலைப் பள்ளி, 176, டி.எச்.ரோடு, எம்.ஆர்.நகர், (சிட்கோ பேருந்து நிறுத்தம்), சென்னை-118.

அமுதத் தமிழ் ஆய்வரங்கம் நடத்தும் சிலப்பதிகாரத் தொடர் சொற்பொழிவு. தலைமை: இளவரச அமிழ்தன்; பங்கேற்பு: தமிழமுதன், க.ஸ்ரீதரன் ; தெற்குத் துகார் கட்டடம், இஸ்துஸ்தான் சேம்பர், ஐந்தாவது தளம், 149, கிரீம்ஸ் சாலை, சென்னை-6; 23.11.19 மாலை 5.30.

குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா கலை இலக்கியப் பெருவிழா. பங்கேற்பு: நீதியரசர் ஆர்.மகாதேவன், சிற்பி பாலசுப்பிரமணியம், தேவி நாச்சியப்பன், மு.வேலாயுதம், மா.கமலவேலன், செல்ல கணபதி, சொ.சேதுபதி ; பிருந்தாவன் வித்யாலயா மெட்ரிக் மேனிலைப் பள்ளி, சேரன் நகர் எதிரில், கவுண்டம்பாளையும், கோவை ; 23.11.19 காலை 9.30.

கம்பன் கழகம் நடத்தும் மாதச் சொற்பொழிவு நிகழ்ச்சி. பங்கேற்பு: மா.சிதம்பரம், பள்ளத்தூர் பழ.பழனியப்பன், உ.தேவதாசு, த.புருசோத்தமன், வி.சுப்பிரமணியன் ; திருமால் திருமண மண்டபம், வெங்கடாபுரம், அம்பத்தூர், சென்னை; 23.11.19 மாலை 6.00.

தேனித் தமிழ்ச் சங்கம் நடத்தும் "தேன் துளிகள்' கவியரங்கம். தலைமை: மு.சுப்பிரமணி; பங்கேற்பு: பே.ராஜேந்திரன், ஹரிஹரன், மதுரன், மு.ரேணுகாதேவி; மாயா புத்தக நிலையம், மேல்தளம், பழைய பேருந்துநிலையம் எதிரில், தேனி ; 23.11.19 மாலை 5.30.

கோவை மாவட்ட பாவேந்தர் பாரதிதாசன் இலக்கியப் பேரவை நடத்தும் ஐம்பெரும் இலக்கியத் திருவிழா. தலைமை: ஆ.மணிமுகம்; பங்கேற்பு: மரிய.விசுவாசம், வீ.சிவகாமி,
பொன்னுசாமி, தேவி நாச்சியப்பன், வ.இரா.தம்பிதுரை; குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா நினைவரங்கம், தென்னக ரயில்வே மஸ்தூர் யூனியன், அங்காடித்தெரு, போத்தனூர் தொடர் வண்டிநிலைய வளாகம், போத்தனூர்; 24.11.19 காலை 10.30.

துவாரகதாஸ் கோவர்தன்தாஸ் வைணவக் கல்லூரி தமிழ்த்துறை நடத்தும் "முருகன் புகழ்பாடும் சபை'யின் 29 ஆவது ஆண்டு தொடக்க விழா. தலைமை: இராம.கணேசன்; பங்கேற்பு: கி.சிவகுமார், ப.முருகன், இரா.ஜெயப்ரியா; வல்லபாச்சார்யா அரங்கம், கல்லூரி வளாகம், துவாரகதாஸ் கோவர்தன்தாஸ் வைணவக் கல்லூரி, அரும்பாக்கம், சென்னை-106 ; 24.11.19 காலை 8.30.

மயிலாடுதுறை திருக்குறள் பேரவை நடத்தும் திங்கள் கூட்டம். தலைமை: சி.சிவசங்கரன்; பங்கேற்பு: கோ.சந்தானம், கி.பார்த்திபராசா, ந.செகந்நாதன், சு.இராமச்சந்திரன்; தியாகி ஜி.நாராயணசாமி நகராட்சி மேனிலைப் பள்ளி, மயிலாடுதுறை; 24.11.19 மாலை 5.30.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com