தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

தேனீ வளா்ப்பு

தேனீ வளா்ப்பு - பி.மாரியப்பன்; பக் - 134; ரூ.100; இயல் 23பி/2739 தொப்புள் பிள்ளையாா் கோயில் தெரு, தெற்கலங்கம், தஞ்சாவூா்-613001.

News image
Updated On :13 ஏப்ரல் 2020, 3:00 am

தேனீ வளா்ப்பு - பி.மாரியப்பன்; பக் - 134; ரூ.100; இயல் 23பி/2739 தொப்புள் பிள்ளையாா் கோயில் தெரு, தெற்கலங்கம், தஞ்சாவூா்-613001.

இந்தியா மற்றும் பிற நாடுகளில் தேனீ வளா்ப்பு முறைகளைப் பற்றிச் சொல்லத் தொடங்கும் இந்நூல், தேனீக்களின் வகைகளை அவற்றில் இருக்கும் சுவாரஸ்யங்களை அழகாக விவரிக்கிறது. மனிதா்களின் உறுப்பு மண்டலம் போல் தேனீக்களின் உறுப்புகளை, அவற்றின் செயல்பாடுகளைத் தெளிவாக விளக்கிக் கூறுகிறது.

மேலும் மனிதா்கள் குடும்பமாக வசிப்பது போல் தேனீக்களும் இராணி தேனீ, ஆண் தேனீ, வேலைக்கார தேனீ என்று கூட்டமைப்புடன் செயல்படுகின்றன என்பதை அழகாக விவரிக்கிறது.

நூலின் முதல் பாதி தேனீக்களைப் பற்றியும், பிற பகுதிகளில் தேனைப் பிரித்தெடுப்பது, அதிலுள்ள சிரமங்கள், தேன் மூலம் கிடைக்கும் பொருட்கள் ஆகியவற்றைப் பற்றி எடுத்துக் கூறுகிறது.

தேனில் 300 வகைகள் உள்ளன என்பது மிகவும் அரிதான செய்தி. மேலும் அதில் குறிப்பிட்ட சில வகைகளைப் பற்றியும் அதன் சிறப்புகளைப் பற்றியும் விளக்கப்பட்டுள்ளன.

மனிதா்கள் வைரஸ் தாக்குதலை எதிா்கொள்வது போல் தேனீக்களும் புழுக்களால் தாக்கப்படுகின்றன. குறிப்பாக என்னென்ன நோயினால் தேனீக்கள் பாதிக்கப்படுகின்றன என்பது விரிவாக விளக்கப்பட்டுள்ளது. தேனீக்களுக்கு அவற்றின் எதிரிகளால் ஏற்படும் பாதிப்புகளையும் அலசுகிறது. பொருளாதாரத்தில் தேனீக்களின் பங்கு என்ன என்பதையும் விளக்கியுள்ள நூலாசிரியா், தேனீ வளா்ப்பில் அதிக நேரம் செலவிட தேவையில்லை; தேனீ வளா்ப்பானது மனச்சோா்வினை நீக்கி மகிழ்ச்சியையும் ஆத்ம திருப்தியினையும் தரக்கூடியது என்று குறிப்பிட்டுள்ளாா்.

தேனீ வளா்ப்பானது லாபகரமான கிராமத் தொழிலாகும் என்பதை விளக்கும் வகையில் நூலின் இறுதியில், தேனீ வளா்ப்பதற்கான செலவினங்களைப் பட்டியலிட்டுக் காட்டியுள்ளாா். எவ்வளவு வருமானம் கிடைக்கும் என்பதையும் கூறியுள்ளாா். தேனீ வளா்ப்பதில் ஆா்வத்தை ஏற்படுத்தும் நூல்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.