ஐந்தாம் வேதம்

ஐந்தாம் வேதம் - என் மண் சார்ந்த காதலும் கலாச்சாரமும் (குறுங்காவியம்) - மணவை பொன் மாணிக்கம்; பக்.160; ரூ.150; கற்பகம் புத்தகாலயம், சென்னை-17; )044- 2431 4347.
ஐந்தாம் வேதம்
Updated on
1 min read

ஐந்தாம் வேதம் - என் மண் சார்ந்த காதலும் கலாச்சாரமும் (குறுங்காவியம்) - மணவை பொன் மாணிக்கம்; பக்.160; ரூ.150; கற்பகம் புத்தகாலயம், சென்னை-17; )044- 2431 4347.
 உலகில் மனிதர்கள் தோன்றிய நாளிலிருந்து காதலும் இருந்து வந்திருக்கிறது. ஒவ்வொரு காலத்திலும் காதலின் தன்மையும் காதலிப்பவர்களின் தன்மையும் மாறிக் கொண்டே வந்தாலும், காதல் எப்போதும் நிலைத்திருக்கிறது.
 இந்நூலில் இடம் பெற்றுள்ள 12 கதைகளில் நம் அன்றாட வாழ்வில் பார்க்கிற பல காதலர்களைச் சந்திக்கலாம். நம்மோடு பழகுகிறவர்களை அவர்களில் உணரலாம்.
 ஆனால் அவர்கள் நம்மிடம் அம்பிகாபதி - அமராவதி, பிருதிவிராஜ் - சம்யுக்தா, ரோமியோ - ஜூலியட், லைலா - மஜ்னு, ஷாஜகான் - மும்தாஜ் காதல் ஜோடிகளாகவே நூலாசிரியரால் அறிமுகம் செய்யப்படுகின்றனர்.
 வழக்கமான சிறுகதைகளுக்கு உரிய எந்த உத்தியும், அழகியல் கோட்பாடுகளும் கடைப்பிடிக்கப்படாமல், இயல்பான மனிதர்களை அவர்களின் இயல்பு கெடாமல் மிக அழுத்தமாகச் சித்திரிப்பதில் நூலாசிரியர் வெற்றி பெற்றிருக்கிறார். இந்நூலைப் படிக்கும் "காதலின் எதிரிகள்', காதலை ஆதரிப்பவர்களாக மாறிவிடுவார்கள் என்பது உறுதி.
 
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com