தமிழக அருந்ததியர் வரலாறும் வாழ்வும்

தமிழக அருந்ததியர் வரலாறும் வாழ்வும் - ச.சீனிவாசன்; பக். 164; ரூ.200; பாலாஜி இண்டர்நேஷனல் பப்ளிஷர்ஸ், புதுதில்லி;)011 - 2411 3270 
தமிழக அருந்ததியர் வரலாறும் வாழ்வும்
Updated on
1 min read

தமிழக அருந்ததியர் வரலாறும் வாழ்வும் - ச.சீனிவாசன்; பக். 164; ரூ.200; பாலாஜி இண்டர்நேஷனல் பப்ளிஷர்ஸ், புதுதில்லி;)011 - 2411 3270
 தாழ்த்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த மக்களாகக் கருதப்படும் அருந்ததியர் சமூகத்தின் வரலாற்றைக் கூறும் நூல். தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளை அருந்ததியர் பேசுவதால் அவர்கள் அந்த மொழிபேசும் நிலப்பகுதியைச்சேர்ந்தவர்கள் அல்லர்; அவர்கள் தமிழ்நாட்டின் ஆதி குடிகள் என்று இந்நூல் கூறுகிறது. அதற்கான ஆதாரங்களையும் முன் வைக்கிறது.
 இதுவரை எழுதப்பட்ட வரலாறு ஆதிக்க சக்திகளின் வரலாறாகவே உள்ளது. அடித்தட்டு மக்களின் வரலாற்றை மக்களின் வாய்மொழி வரலாறு, கல்வெட்டுகள், கல்வெட்டு, ஓலைச்சுவடிகள், கதைப்பாடல்கள் உள்ளிட்ட பல்வேறு ஆதாரங்களின் அடிப்படையில் புதியதாக எழுத வேண்டும் என்கிறார் நூலாசிரியர்.
 தோல் தொழிலில் ஈடுபட்டு வந்த செம்மான், சக்கிலி, பகடை, மாதாரி, மாதிகா ஆகிய ஐந்து சாதியினரை அருந்ததியர் என்கிற ஒரே பெயராக மாற்றி 1922 -ஆம் ஆண்டில்தான் அரசாணை பிறப்பிக்கப்பட்டது.
 ஆதிகாலத்தில் அருந்ததியர்கள் தாழ்ந்தவர்களாக இல்லை. மாறாக காலப்போக்கில் ஆதிக்க சாதிகளால் தாழ்த்தப்பட்டவர்களாக ஆக்கப்பட்டார்கள். அருந்ததியர்களின் மரபுத் தொழில் துப்புரவுப் பணி அல்ல. அவர்கள் பாளையக்காரர்களாகவும், ஜமீன்தார்களாகவும், சேனாதிபதிகளாகவும், போர்வீரர்களாகவும், மதிப்புமிக்க அரண்மனைப் பணியாளர்களாகவும் வாழ்ந்தவர்கள் என்கிறார் நூலாசிரியர்.
 ஒண்டிவீரன் வரலாற்றையும், சிவகங்கை மண்ணின் ராணியாக இருந்த வேலுநாச்சியாரின் நம்பிக்கைக்குரிய தோழியாக, படைத் தளபதியாக இருந்த குயிலியின் வரலாற்றையும் இந்நூல் மூலம் தெரிந்து கொள்ள முடிகிறது. வேலு நாச்சியாரை வீழ்த்துவதற்காக வெள்ளையர்கள் ஆயுதங்களை, வெடி பொருள்களை குவித்து வைத்து இருந்த ஆயுதக் கிடங்கை அழிக்க, தன் மீது நெருப்பு வைத்துக் கொண்டு ஆயுதக் கிடங்கில் குதித்த முதல் தற்கொலைப் படைப் போராளியான குயிலியின் வரலாறு நம்மை நெகிழ வைக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com