அ. மாதவையா

அ. மாதவையா: மூன்று மொழிபெயர்ப்பு நாவல்கள் - கிளாரிந்தா, சத்தியானந்தன், தில்லைக் கோவிந்தன்; தமிழில் - சரோஜினி பாக்கியமுத்து, வே. நாராயணன், ஜோசப் குமார்; பக்.907; ரூ. 900; காவ்யா, சென்னை - 24; )044-2372
அ. மாதவையா

அ. மாதவையா: மூன்று மொழிபெயர்ப்பு நாவல்கள் - கிளாரிந்தா, சத்தியானந்தன், தில்லைக் கோவிந்தன்; தமிழில் - சரோஜினி பாக்கியமுத்து, வே. நாராயணன், ஜோசப் குமார்; பக்.907; ரூ. 900; காவ்யா, சென்னை - 24; )044-2372 6882.
 மிகச் சிறந்த எழுத்தாளரான அ. மாதவையாவின் மூன்று ஆங்கில நாவல்களின் - கிளாரிந்தா, சத்தியானந்தன், தில்லைக் கோவிந்தன் - ஆகியவற்றின் மொழிபெயர்ப்புகள் ஒரே தொகுப்பாக மறுபதிப்பு கண்டிருக்கிறது.
 தஞ்சையில் மராத்திய ஆட்சிக்காலத்தில் அரச குடும்பத்தைச் சேர்ந்த - வயதான ஒருவருக்கு மணம்முடிக்கப்பட்ட இளம்பெண் கிளாரிந்தாபாய், கணவன் இறந்ததும் வற்புறுத்தி உடன்கட்டையேற்றப்படுகிறாள். இதைக் காணப் பொறுக்காமல் கிழக்கிந்திய கம்பெனி வீரர் லிட்டில்டன் அவளைக் காப்பாற்றி அழைத்துச் செல்ல, சமூகத்திலிருந்து விலக்கப்படுகிறாள் கிளாரிந்தா. பின்னால் லிட்டில்டனையே மணம்புரிந்து, கிறிஸ்துவத்தைத் தழுவி, பாளையங்கோட்டையில் வாழ்ந்து சேவையாற்றுகிறார். நிஜத்தில் நடந்த ஒரு சம்பவத்தை நாவலாக்கி, தான் நினைத்ததையெல்லாம் எழுதியுள்ளார் மாதவையா.
 சத்தியானந்தன் நாவலும் கிளாரிந்தாவைப் போலவே சமூகத்தின் வரலாற்று நாவல்தான். பிராமண சமூகத்திலிருந்து கிறிஸ்துவத்துக்கு மாறிய ஒருவரின் கதை. சத்தியானந்தனும் கூட அந்தக் காலத்தில் வாழ்ந்த ஒருவராக இருக்கலாம். இந்த நாவலையும் தாம் எண்ணியதெல்லாவற்றையும் கூற, பயன்படுத்திக்கொள்கிறார் மாதவையா.
 தில்லைக் கோவிந்தன் - தன் வரலாறு போன்று எழுதப்பட்ட நாவல். ஐரோப்பிய வாழ்க்கைப் பாணி தாக்கங்களில் சிக்கிக் கொள்ளும் ஹிந்து வாழ்க்கை முறைமையின் குழப்பங்களைச் சித்திரிக்கிறது இந்நாவல்.
 1944-இல் தில்லைக் கோவிந்தன் நூல், தினமணி காரியாலயத்தின் ஏழாவது வெளியீடாக, பி.ஸ்ரீ.யைப் பதிப்பாசிரியராகக் கொண்டு வெளிவந்திருக்கிறது. இவற்றின் மொழிபெயர்ப்பும் மிகச் சிறப்பு.
 மாதவையாவின் நாவல்களில் அந்தக் காலகட்டத்தில் சாதிகளின் பெயரால் சமுதாயத்தில் நிலவிய ஏற்றத்தாழ்வுகளும் கொடுமைகளும் கடுமையாகச் சாடப்படுகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com