அரண்மனை வனம் (சிறுகதைத் தொகுப்பு) - இந்திரநீலன் சுரேஷ்; பக். 148 ; ரூ. 200; கலைமகள் பப்ளிகேஷன்ஸ், சென்னை - 4; 044- 2498 1699.
இந்தத் தொகுப்பில் உள்ள 23 கதைகளுமே ஒவ்வொரு கோணத்தில் நமது மனதில் ஆழப் பதிகின்றன. கடைசிக் கதையான 'மின்னி' வாழ்வின் அநர்த்தத்தை மின்னல் போலத் துலங்கச் செய்து மனதைப் பிசைகிறது.
ராமாயணக் காப்பிய மாந்தரான லட்சுமணனின் மனைவி ஊர்மிளையின் பார்வையில் விரியும் பெண்ணியச் சிந்தனையின் விளக்கமே 'அரண்மனை வனம்' சிறுகதை.
'27-ஆம் தலைமுறை' சிறுகதையில் அமுதீசர் கோயில் அர்ச்சகர் சங்கரன், அவரது மனைவி கற்பகம் ஆகியோரின் பார்வையில் வாழ்வின் இருப்பு கேள்விக்குள்ளாக்கப்படுகிறது. கதையின் முடிவு அனந்தம். 'ஸ்வேதா யுகேஜி-2பி', சிறிய சிறுகதைதான். ஆனால் வெட்கத்துடன் சிரிக்கும் சிறுகுழந்தை ஸ்வேதாவை மனக்கண்ணில் தரிசிக்கும்போது நமது முகத்தில் தானாக முறுவல் முகிழ்க்கிறது. அதேபோலத் தான், 'சாலையில் ஒரு சம்பவம்' சிறுகதையின் நாயகியான, கட்டைவிரல் உயர்த்தி மானுடநேயத்தைக் காட்டும் சிறுமியும்.
'நினைவுகள் அழிவதில்லை' நாயகி வைஜெயந்தி போல பலருக்குள்ளும் வெண்சிறகு பறந்துகொண்டுதானிருக்கிறது. 'காட்டு வெளியினிலே' காவல் காக்கும் பிச்சியின் தாய்மை உணர்வும் மனதை வருடுகிறது.
நூலாசிரியர் இந்திரநீலன் சுரேஷ் மிகத் தாமதமாக தமிழ் எழுத்துத் துறைக்குள் நுழைந்திருக்கிறார். இந்தத் தொகுப்புக்கு, 'கலைமகள்' ஆசிரியர் கீழாம்பூர் சங்கர சுப்பிரமணியன் அணிந்துரையும், எழுத்தாளர் வித்யா சுப்பிரமணியம் முன்னுரையும் எழுதி இருப்பது சிறப்பு.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

