தெய்வங்களும் பண்பாட்டு அசைவுகளும்

தெய்வங்களும் பண்பாட்டு அசைவுகளும்

தெய்வங்களும் பண்பாட்டு அசைவுகளும் - தொ.பரமசிவம்; பக். 200;  ரூ.215;  நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்., சென்னை-50; 044-2625 1968. 

ஆய்வுகளைச் செய்து பல்வேறு நூல்களை வெளியிட்ட நூலாசிரியரின் சிறப்புமிகு நூல் இது. 'தெய்வங்களைப் பற்றி பேசாமல் ஒரு பண்பாட்டினை ஆய்வு செய்ய இயலாது' என்று கூறியுள்ள நூலாசிரியர்,  நாட்டார் தெய்வங்கள், விழாக்கள் குறித்து கட்டுரைகளை எழுதியுள்ளார்.

தனது நேரடி கள ஆய்வில் எழுதுபவை என்பதால், பிற நூல்களைக் காட்டிலும் இவரது நூல்கள் தனித்துவத்தையே பெற்றிருக்கிறது. இதுதவிர, நூலில் எழுதியுள்ள முக்கிய சம்பவங்களுக்கு அடிகோடிட்டுள்ள நூலாசிரியர், அந்தக் கட்டுரையின் இறுதியில் கூடுதல் விவரங்கள் அறிய விரும்புவோருக்காக பயன்பட்ட நூல்களையும் தகவல் எடுக்கப்பட்ட விவரங்களையும் குறிப்பிடுவது சிறப்புடையது.

சிறுதெய்வங்கள், குல தெய்வங்கள் வழிபடுதலின் முக்கியத்துவம், அவற்றின் விழாக்கள், வழிபாடுகள், நேர்த்திக் கடன் என்று பல்வேறு சிறப்பம்சங்கள் நூலில் இடம்பெற்றுள்ளன. மொத்தமுள்ள 28 கட்டுரைகளில் 'பெரியாரியலும் நாட்டார் தெய்வங்களும்', 'சமய நல்லிணக்கம்- பெரியாரியப் பார்வையில்...' போன்ற வித்தியாசமான நோக்குடைய கட்டுரைகளில் வியக்க வைக்கும் தகவல்கள் இடம்பெற்றுள்ளன.

1939-இல் மதுரை கோயிலில் ஹரிஜனங்களின் ஆலயப் பிரவேசத்துக்கான காரணம் என்ன என்பதற்கான அரிய தகவல் நூலில் இடம்பெற்றுள்ளது. தமிழ் இலக்கியம், ஆன்மிகம், வரலாறு, அரசியல் போன்ற பல்துறைகளை அறிய விரும்புவோர் அவசியம் வாசிக்க வேண்டிய நூல் இது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com