பாரிஜாத்

பாரிஜாத்

பாரிஜாத் - நாசிரா ஷர்மா, தமிழில் - டி. சாய் சுப்புலட்சுமி, பக். 864, ரூ. 1,150; சாகித்திய அகாதெமி, சென்னை - 600 018, 044 - 24311741.  

மதங்களைக் கடந்து காதலையும் பிரியங்களையும் சுற்றிப் பின்னப்பட்ட நெடியதொரு ஹிந்தி நாவல் பாரிஜாத்.  பாரம்பரியமிக்க இரு குடும்பங்கள் நட்புடன் வாழ, அவர்களுடைய குழந்தைகள் ஒவ்வொருவித கனவுகளுடன் வளர்கிறார்கள்.  தன்னைவிட மூத்தவளான பிரிட்டனைச் சேர்ந்த எலேசனைக் காதலித்துத் திருமணம் செய்துகொள்கிறான் ரோஹன். இருவரும் பிரியும்போது எலேசனுடன் செல்ல நேரிடுகிறது இவர்களின் மகனுக்கு. பிரிவுக்குப் பிறகு தொடங்கும் கதை முன்னும் பின்னுமாக -  நிகழ்காலமும் கடந்த காலமுமாகக் கலந்து - எண்ணற்ற மனிதர்களுடன் நகர்ந்து செல்கிறது.

ரோஹனுடைய பெற்றோரில் தொடங்கி, நண்பர்கள், குடும்பத்தினர், சம்பந்தப்பட்ட நிகழ்வுகள்  எனச் செல்லும் நாவலில் மாறுபட்ட பண்பாடுகளும் பேசப்படுகிறது.  நாயகன் ரோஹனின் மன அவதிகளும் சோகங்களும் சிந்தனையோட்டங்கள், சிறுவயதுத் தோழன் காசிமையே மணந்து, பறிகொடுத்துவிட்ட நாயகி ரூஹியின்  வேதனைகள், ஏக்கங்கள், மனக்குமுறல்கள், இவர்கள் இருவரைச் சுற்றியுள்ள நட்பு மற்றும் சுற்றத்தினரின் அக்கறைகள், சிக்கல்கள் என விலாவாரியாக எழுதுகிறார் நாசிரா ஷர்மா. 

'தேவை என்பதைவிட நம்பிக்கை என்ற ஒன்று மனிதனை எப்படியெல்லாம் ஏமாற்றுகிறது' என்று ரோஹன் நினைப்பதைப் போல நாவலெங்கும் மனித மனங்களை வெளிப்படுத்தும் எண்ணற்ற தத்துவார்த்த வரிகள்.  

சின்னப் பெண்ணொருத்தி தன் பொம்மையானது உடைந்தால் எப்படி உடைந்துபோவாளோ அப்படி தெரிகிறாள் ரோஹனுக்கு ரூஹி. கவிதைகளே நூலில் அதிகம் கையாளப்பட்டிருப்பது சிறப்பு.

'எலேசனும் அவள் அம்மாவும் ஒரு சாபக்கேடான வாழ்க்கையை வாழ வேண்டிய நிர்பந்தத்தில் இருக்கையில்' தன் மகன் பாரிஜாத்தை மீட்டெடுக்க எவ்வாறெல்லாம் முனைகிறான் ரோஹன் என்பதில் ஒரு தந்தையின் தவிப்பைக் கடைசி வரையில் காட்சிப்படுத்துகிறார் ஆசிரியர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com