தேர்வுக்குத் தயாராகுங்கள்

தேர்வுக்குத் தயாராகுங்கள்
Updated on
1 min read

தேர்வுக்குத் தயாராகுங்கள் - ப.சரவணன்; பக்.128; ரூ.160; சுவாசம் பப்ளிகேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட், சென்னை-600127, ✆8148066645.

தேர்வுக்காலம் வந்து விட்டாலே அது மாணவர்களுக்கு சோதனைக் காலம் என பலரும் நினைக்கிறார்கள். அது தவறு; உண்மையில் தேர்வு என்பது விழாதான். அதில் முழு ஆண்டுத்தேர்வை பெரிய திருவிழாவாக கொண்டாட வேண்டும்.

மாணவர்கள் தேர்வுகளுக்கு எவ்வாறு தயாராக இருக்க வேண்டும், கல்வியின் முக்கியத்துவம் என்ன என்பது குறித்து இந்த நூலில்  20 அத்தியாயங்களில் விளக்கியிருக்கிறார் நூலாசிரியர் ப.சரவணன். ஒவ்வொரு அத்தியாயமும் தொடங்குவதற்கு முன்பாக கல்வியின் முக்கியத்துவம் குறித்து நெல்சன் மண்டேலா, ரே லெப்லாண்ட், சுவாமி விவேகானந்தர் என பல அறிஞர்களின் கூற்றுகள் இடம்பெற்றுள்ளன.

படிப்புக்கு நேரம் காலம் தேவையில்லை,  உங்களுக்கு நீங்களே ஆசிரியர், இணைந்து படித்தல், தனியாகப் படித்தல் என அடுத்தடுத்து வரும் அத்தியாயங்களில் படிப்பது வெறும் தேர்வுக்காக மட்டுமல்ல; அது நம் வாழ்க்கைக்கான கட்டமைப்பை உருவாக்குவதற்காக என்பது அழுத்தமாகச் சொல்லப்பட்டிருக்கிறது. படிப்பதை அறிவியல் கண்ணோட்டத்துடன் அணுகும் இந்தப் புத்தகத்தின் ஒவ்வொரு அத்தியாயத்திலும் ஒரு செயல்முறைப் படிவம் தரப்பட்டுள்ளது. மாணவர்களின் படிப்புக்கு இந்தப் படிவங்கள் நிச்சயம் உறுதுணையாக இருக்கும்.   'காலையில் படிக்க முடியவில்லை, இரவில் படிக்க முடியவில்லை, படித்ததை நினைவுக்குக் கொண்டுவர முடியவில்லை' என கூறுவோருக்கு இந்த நூலில் உள்ள வழிகாட்டுதல்கள் சிறந்த தீர்வாக அமையும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com