தாமஸ் ஆல்வா எடிசன் - எஸ்.எல்.வி.மூர்த்தி; பக்.280; ரூ.320; சுவாசம் பப்ளிகேஷன்ஸ், 52/2, பி.எஸ்.மஹால் அருகில், பொன்மார், சென்னை - 600127.
தனது அறிவியல் கண்டுபிடிப்புகளால் உலகை மாற்றியமைத்ததுடன், மனித வாழ்க்கை முறையையும் புரட்டிப்போட்ட தாமஸ் ஆல்வா எடிசனின் சுயசரிதம் போல விரிவாக இந்நூல் பதிவு செய்துள்ளது.
தெளிவாகச் சிந்திக்க வேண்டுமென்றால் தனிமையில் அமர்ந்து மனதை ஒருமுகப்படுத்த வேண்டும் என்பதை தனது வாழ்க்கையிலும், அறிவியல் கண்டுபிடிப்பு முயற்சிகளிலும் அவர் கடைப்பிடித்துள்ளார்.
குடும்பச் சூழல், வறுமை, பள்ளியிலிருந்து வெளியேற்றப்பட்டது, உடல்குறைபாடுகள், வியாபாரத் தந்திரம் இல்லாமை என எடிசனிடம் எத்தனையோ குறைகள் இருப்பினும்
அவருடைய விடாமுயற்சியும், சுயம்புவாகச் சிந்திக்கும் திறனுமே அவருக்கு பெரும்புகழையும் மனித குலத்துக்கு அரிய கண்டுபிடிப்புகளையும் அளித்தன.
அவரது கண்டுபிடிப்புகளில் அதிக நேரம், பரிசோதனை முயற்சிகளை மின்விளக்கை கண்டுபிடிக்கவே செலவிட்டுள்ளார். மின்விளக்கில் பயன்படுத்தப்படும் இழையை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஜேம்ஸ் ரிக்கால்ட்டனை திருச்சி, தஞ்சாவூர், மதுரை, சென்னை உள்பட உலகம் முழுவதும் அனுப்பி வைத்தார் என்ற தகவல் வியப்படைய வைக்கிறது.
கார்ப்பரேட்டுகளின் வெற்றிக்காக நெறிகளைக் கைவிட்டு எடிசன் செய்த அறமற்ற செயல்களையும் இந்நூல் பதிவு செய்துள்ளது. வாழ்க்கையில் ஒருமணி நேரம்கூட எடிசனின் கண்டுபிடிப்புகளைப் பயன்படுத்தாமல் இருக்க முடியாது. அதனால்தான் அவர் சாமானியர்களின் விஞ்ஞானி என்று இன்றும் நினைவுகூரப்படுகிறார். வாசிக்க வேண்டிய நூல் இது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.