நான் கண்ட திரை இசை சாதனையாளர்கள் - டி.கே.எஸ். கலைவாணன்; பக். 268; ரூ.275; வானதி பதிப்பகம், சென்னை-17; ✆ 044- 2434 2810.
டி.கே.எஸ்.கலைவாணன், அவ்வை டி.கே.சண்முகத்தின் மகனாவார். சாஸ்திரீய சங்கீதம் கற்றவர், மேடைகளில் திரை இசை நிகழ்ச்சிகளை நடத்தியவர்.
தான் அறிந்த இசைக்கலைஞர்களின் வாழ்க்கை - சிறந்த பாடல் - அறிமுகப் பாடல் என 45 கட்டுரைகளாக எழுதித் தொகுக்கப்பட்டது நூல் இது.
இசையமைப்பாளர் எஸ்.வி.வெங்கட்ராமன், ஆர்.சுதர்சனம், ஜி.ராமநாதன், கே.வி.மகாதேவன், டி.ஆர்.பாப்பா, எம்.எஸ்.வி., டி.கே.ராமமூர்த்தி, சங்கர் கணேஷ், வி.குமார், ஜி.கே.வெங்கடேஷ், இளையராஜா, வேதா, அமர்சிங், குன்னக்குடி வைத்தியநாதன், தேவா, ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்டோரின் வாழ்வு- திரைப்பாடல் அறிமுகம், பிரபல பாடல்கள் என ஒவ்வொன்றையும் சிலாகித்து எழுதியிருக்கிறார் நூலாசிரியர்.
பாடகர்களான சி.எஸ்.ஜெயராமன், ஏ.எம்.ராஜா, திருச்சி லோகநாதன், டி.எம்.எஸ்., பி.பி.ஸ்ரீநிவாஸ், சீர்காழி கோவிந்தராஜன், கே.ஆர்.ராமசாமி, டி.ஆர்.மகாலிங்கம், சந்திரபாபு, பி.கண்டசாலா, ஏ.எல்.ராகவன், எஸ்.பி.பி., மலேசியா வாசுதேவன், ஜேசுதாஸ், சி.எஸ்.கிருஷ்ணன், கமல்ஹாசன் உள்ளிட்டோரின் அறிமுகப் பாடல், நெஞ்சம் கவர்ந்த பாடல், அவர்களது வாழ்க்கை விவரங்களையும் பதிவிட்டுள்ளார்.
ஜமுனா ராணி, பி.சுசீலா, பி.லீலா, பி.பானுமதி, ஜிக்கி, எம்.எஸ். ராஜேஸ்வரி, எஸ்.ஜானகி, வாணி ஜெயராம், எல்.ஆர்.ஈஸ்வரி என ரசிகர்களின் மனம் கவர்ந்த பாடகிகளின் வரலாற்றுடன் தலைசிறந்த பாடல்களையும் நூலாசிரியர் எழுதியுள்ளார். இயக்குநர் ஏ.பி.நாகராஜனைப் பற்றிய அறியாத தகவல்கள் ஏராளம். திரை இசை ரசிகர்களுக்கு ஓர் இனிய நூல்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.