சித்தர்களின் மூலிகைக் குடிநீர் மருத்துவம் - வெ.தமிழழகன்; பக். 312; ரூ.275; அருணா பப்ளிகேஷன்ஸ், சென்னை-49; ✆ 94440 47790;
4,448 நோய்கள் உள்ளதாகக் கூறும் நூலாசிரியர், இயற்கை நமக்கு அளித்த கொடையான மூலிகைகளால் உடலிலிருந்து நோயை விரட்ட முடியும் என்பதை விளக்கி எழுதப்பட்டுள்ள நூல் இது.
நிலத்துக்கு நிலம் தண்ணீர் மாறுபடுகிறது என்பதையும், அதன் பண்புகள் எவ்வாறு வேறுபடுகின்றன என்பதையும் முதலில் தெளிவுபடுத்திவிட்டு, அதிலிருந்து பிணி தீர்க்கும் குடிநீரை எவ்வாறு தயாரிப்பது என விளக்கியிருப்பது சிறப்பு.
காய்ச்சல்களில் 60-க்கும் மேற்பட்டவை உள்ளதும், அவற்றை முறையாகக் கண்டறிந்து குணப்படுத்துவதற்கான முறைகளும் விரிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளன.
கொதித்த நீருக்குள்ள மருத்துவக் குணங்களையும், உடலில் நீர்ச் சத்து இழப்பு ஏற்படாமல் இருக்க கையாள வேண்டிய வழிமுறைகளையும் குறிப்பிட்டிருப்பது விழிப்புணர்வு தகவலாக அமைந்துள்ளது. அஞ்சறைப் பெட்டிக்குள் இருந்து நாம் எடுத்து பயன்படுத்தும் பொருள்களைக் கொண்டே பல நோய்களை விரட்ட முடியும் என்பது இந்நூல் உணர்த்தும் உண்மை. சில அறியப்படாத வேர்களையும், மூலிகைகளையும் கொண்டு எவ்வாறு ஆரோக்கியத்தை காக்கலாம் என்பதை நூலாசிரியர் தெளிவுபடுத்தியிருக்கிறார். பெருந்தொற்று காலங்களில் மனித குலத்தை காப்பதற்கு நமது பாரம்பரிய மருத்துவ முறைகள் முக்கியப் பங்கு வகித்தன. எத்தகைய பிணி அண்டினாலும் அதனை வேரறுக்க வேர்களும், மூலிகைகளும் உள்ளன என்பதை இந்நூல் சான்றுரைக்கிறது.
மூலிகை குடிநீரைத் தயாரிக்கும் முறைகள் குறித்து கூறியிருக்கும் நூலாசிரியர், அதனை எளிமைப்படுத்தி எழுதியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.