நாள் ஒன்று கதை ஒன்று (365 கதைகள்)

நாள் ஒன்று கதை ஒன்று (365 கதைகள்)
Updated on
1 min read

நாள் ஒன்று கதை ஒன்று (365 கதைகள்) - செவாலியே பேராசிரியர் க.சச்சிதானந்தம்;  பக்.288; ரூ.200; பாலா பதிப்பகம்,  118 நெடுந்தெரு சந்து, நல்லாத்தூர், கடலூர் மாவட்டம் - 605 106.

வெளிநாட்டுக் கதைகளை மொழிபெயர்க்கும் பணியில் 50 ஆண்டுகளாக ஈடுபட்டு வரும் புதுச்சேரி பிரெஞ்சு கல்லூரியின் முன்னாள் பேராசிரியரான நூலாசிரியர் எழுதிய மொழிபெயர்ப்பு நூல் இது. அகவை 90-ஐ கடந்தும் எழுத்துப் பணியை நிறுத்தாமல், நல்ல கருத்துகளை தமிழர்களுக்கு அளிக்கும் முயற்சியில் வெற்றி கண்டு வருகிறார்.

ஜனவரி 1 முதல் டிசம்பர் 31 வரை என நாள் வாரியாகக் குறிப்பிட்டு 365 கதைகள் இடம்பெற்றுள்ளன.   பிரான்ஸ், ஆப்பிரிக்கா, சீனா, பாலஸ்தீனம், மங்கோலியா, அல்ஜீரியா, துருக்கி உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் செவிவழிக் கதைகள்,  வெளிவந்த கதைகளின் தொகுப்பு இது. 

நீதி, அறிவுரை, தத்துவம், பொழுதுபோக்கு, நகைச்சுவை,  தர்மம்,  நல்வாழ்க்கை, நல்லதொரு இல்லறம், நன்னடத்தை, தன்னம்பிக்கை உள்பட பல்வேறு கருத்துகளை அறியும் பல்கலைப் பெட்டகமாக இந்த நூல் விளங்குகிறது.

சில வரிகள் முதல் ஓரிரு பக்கங்கள் வரை கதைகள் இருந்தாலும்,  ஒவ்வொன்றும் நல்லதொரு விஷயத்தை எடுத்தியம்புகிறது.  அனைத்துத் தரப்பினரும் படித்தறியும் வகையில் எளிய நடையில் எழுதப்பட்டுள்ளது.

இன்றைய தலைமுறையினருக்கு நீதிபோதனை அவசியம் என்ற நிலையில்,  இதுபோன்ற நூல்களை வாசிக்க அளிக்க வேண்டியது கவனத்தில் கொள்ள வேண்டும்.   கதைகள் கொண்ட நூலாக இருந்தாலும், பொழுதுபோக்காக இல்லாமல் நற்பண்புகளை அறியும் வகையில் தனித்துவம் பெற்று விளங்குகிறது. படிக்கவும் பரிசளிக்கவும் சிறந்தது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com