காத்திருக்கிறாள் கரும்பு

காத்திருக்கிறாள் கரும்பு- பா.முத்துக்குமரன்; பக். 200; ரூ.200; கண்மணி கிரியேட்டிவ் வேவ்ஸ், சென்னை-17; 97910 71218.
காத்திருக்கிறாள் கரும்பு
Updated on
1 min read

காத்திருக்கிறாள் கரும்பு- பா.முத்துக்குமரன்; பக். 200; ரூ.200; கண்மணி கிரியேட்டிவ் வேவ்ஸ், சென்னை-17; 97910 71218.
 37 ஆண்டுகள் பத்திரிகையாளராகப் பணிபுரிந்த நூலாசிரியர் தினமணி கதிர், தினமணி தீபாவளி மலர் உள்ளிட்ட இதழ்களில் எழுதிய 24 சிறுகதைகளின் தொகுப்பே இந்த நூல்.
 சிறுகதைகள் ஒவ்வொன்றும் ஒவ்வோர் அர்த்தத்தைஅளிக்கின்றன. மனித வாழ்வில் ஒவ்வொரு பரிணாமத்திலும் எவ்வாறு வாழ வேண்டும் என்பதை எடுத்துரைக்கின்றன. படிக்கும்போது, வாழ்க்கையில் பலரும் அனுபவித்த, அனுபவித்துவரும் வேதனைகள் கண்முன்
 நிழலாடுகின்றன.
 "பிரச்னைகள் இல்லாத மனிதர்கள் யார் இருக்கிறார்கள்; அவற்றோடுதான் வாழ வேண்டும்' என்று கருத்தைச் சொல்கிறார் நூலாசிரியர். வாழ்க்கையின் அவசியம், பிரச்னைகளை எதிர்கொள்ளும் மனப் பக்குவம், தத்துவம் உள்ளிட்ட விஷயங்களை எடுத்துரைக்கிறார்.
 "ஊருதாயி', "கெங்கலிக்கா', "ஓலைக்காற்றாடி', "கிளிக்கூண்டு', "வள்ளித்திருமணம்', "காத்திருக்கிறாள் கரும்பு' போன்ற சிறுகதைகள் கிராமத்து வாழ்க்கையின் அவசியத்தைப் பிரதிபலிக்கின்றன.
 "நாகஸ்வரசுவாமி' என்ற சிறுகதையில், முதியோர் இல்லத்தில் இருக்கும் பெரியவர் தனது வளர்ப்பு மகனால் துரத்திவிடப்பட்டு அடைக்கலமாகி மலரும் நினைவுகளை நினைவுபடுத்துவதைப் படிக்கும்போதே கண்களில் கண்ணீர் ததும்புகிறது.
 பாரதியார், திருமூலர், வள்ளலாரின் அரிய பாடல்கள் நூலில் மேற்கோள் காட்டப்பட்டிருப்பது தனிச்சிறப்பு.
 சோர்ந்து கிடக்கும் மனிதர்களுக்கு புத்துணர்வு, போராடிக் கொண்டிருக்கும் மனிதர்களுக்கு வழிகாட்டி என்று நூலைச் சொல்லலாம். சிறுகதை பிரியர்களுக்கு புதிய அனுபவம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com