ஆட்கொல்லி விலங்கு

ஆட்கொல்லி விலங்கு
Updated on
1 min read

ஆட்கொல்லி விலங்கு - எஸ்.பி.சொக்கலிங்கம்; பக்.168; ரூ.200; கிழக்கு பதிப்பகம், சென்னை - 14; ✆ 044-4200 9603.

முதுமை காரணமாக வேட்டையாடும் திறனை இழக்கும் சிங்கம், புலி, சிறுத்தை ஆகிய மிருகங்கள் ஆடு, மாடு, மனிதர்களைத் தாக்கி இரையாக்கி,  தங்களை ஆட்கொல்லி விலங்குகளாக வெளிப்படுத்தும். 
கர்நாடக-தமிழக எல்லை வனப்பகுதிகளில் வசித்த புலிகள், சிறுத்தைகளில் சில அவ்வப்போது ஆட்கொல்லிகளாக மாறி மனிதர்களின் உடைமைக்கும் உயிருக்கும் ஊறு விளைவித்தன.  அவ்வாறு ஊறு விளைவித்த ஆட்கொல்லி விலங்குகளை, ஸ்காட்லாந்தை பூர்வீகமாகக் கொண்ட கென்னத் ஆண்டர்சன் எவ்வாறு வேட்டையாடிக் கொன்றார் என்பது குறித்து இந்நூல் மிகவும் சுவாரஸ்யமாக பதிவு செய்துள்ளது.

ஒரு விலங்கு மனிதனை வேட்டையாடுவதாகட்டும் அல்லது மனிதன் விலங்கை வேட்டையாடுவதாகட்டும், ஒரு வேட்டை படிப்படியாகவும் மிகவும் நுணுக்கமாகவும் எவ்வாறு திட்டமிட்டு நிகழ்த்தப்படுகிறது என்பதை வாசிக்கும்போது மிகவும் பிரமிப்பாக இருக்கிறது. 

ஆட்கொல்லி விலங்குகளின் நடமாட்டம், இருப்பிடம், உணவுப் பழக்கம், இயல்பு, வயது உள்ளிட்ட விவரங்களைச் சேகரிப்பது, அவைகளை கொல்ல ஆண்டர்சன் ஆடு, மாடு, கழுதைகளைத் தூண்டிலாகப் பயன்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு தகவல்களை இந்நூல் விரிவாக எடுத்தியம்புகிறது.

ஒவ்வொரு வேட்டையையும் விறுவிறுப்பாக விவரிப்பதோடு மட்டுமல்லாது கூடவே வனம், வனச்சூழல் குறித்த பல்வேறு தகவல்கள் இடம்பெற்றிருப்பதே இந்நூலின் சிறப்பு.

சாகசம், வனம், வேட்டை, விலங்குகள் குறித்து ஆர்வமுள்ளோர் வாசிக்க வேண்டிய நூல். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com