தமிழர் சமயம்

தமிழர் சமயம்
Updated on
1 min read

தமிழர் சமயம் - முனைவர் ப.பாலசுப்பிரமணியன்;  பக்.184; ரூ.200; சங்கர் பதிப்பகம்,  சென்னை-49; 044-2650 2086.

இந்தியாவில் தோன்றிய மதங்களில் தமிழர்களின் மெய்யியல் எனும் வாழ்வியலை மையமாகக் கொண்ட மதங்கள்தான் அதிகம் என்கிறார் நூலாசிரியர். 

ஆதித்தமிழர்கள் பண்டைய காலத்தில் இயற்கையையும் முன்னோர்களையும் வழிபட்டு வந்துள்ளனர். தொடர்ந்து, தமிழர்களின் வாழ்வியல் மரபு சித்தர்களால் உருவாக்கப்பட்டது. இலக்கியம், ஆன்மிகத்தில் தமிழர்களின் பங்களிப்பு அளப்பரியது.  பண்டைய தமிழகத்தில் சமயங்கள் எவ்வாறு இருந்தன, வழிபாட்டு முறைகள், மக்களின் நம்பிக்கைகள், சமூகக் கொள்கை குறித்து சுருக்க வடிவில் படிக்க முடிகிறது.

குல தெய்வ வழிபாடு, சிறுதெய்வ வழிபாடுகளை ஏன், எதற்கு, எப்படி, வழிபடுவது குறித்து சிறப்புற விளக்கப்பட்டுள்ளது.

சித்தர்கள், பெண் சித்தர்கள், மன்னர்கள், வான் ஆராய்ச்சி, தீப வழிபாடு, நடுகல் வழிபாடு, ஐவகை நில வழிபாடு... என்ற தலைப்புகளில் 34 கட்டுரைகள் தமிழர்களின் பாரம்பரியத்தை அழகுற விளக்குகிறது. தமிழர்களின் வரலாற்றில் இந்து சமயம் பெரும் பங்களிப்போடு இருந்திருக்கிறது. இருப்பினும், புத்தர், மகாவீரர் போன்றோரும் அங்கம் வகித்துள்ளதையும் நூலாசிரியர் அற்புதமாக விளக்கியுள்ளார்.

தமிழர் வரலாற்றை அறிய விரும்புவோர் வாசிக்க வேண்டிய நூல் இது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com