வரலாற்றில் இஸ்லாம் - ஒரு பண்பாட்டியல் பார்வை

வரலாற்றில் இஸ்லாம் - ஒரு பண்பாட்டியல் பார்வை

வரலாற்றில் இஸ்லாம் - ஒரு பண்பாட்டியல் பார்வை - எம்.என். ராய் ( தமிழில் - அ.வா. முஹ்சீன்); பக். 86; ரூ. 90; அடையாளம், புத்தாநத்தம் - 621310;  ✆ 04332 - 273444.

மார்க்சிய அறிஞரும் அரசியல் கோட்பாட்டாளருமான எம்.என். ராய் எழுதி, 1939-இல் வெளியான 'ஹிஸ்டாரிகல் ரோல் ஆஃப் இஸ்லாம் - ஆன் எஸ்úஸ ஆன் இஸ்லாமிக் கல்ச்சர்' என்ற நூலின் மொழிபெயர்ப்பு. 

நூலில் 7 கட்டுரைகள் இடம்பெற்றிருக்கின்றன. வெளிவந்து 80 ஆண்டுகளுக்குப் பிறகும் பொருத்தப்பாடுடையதாக இருப்பதுதான் இந்த நூலின் சிறப்பு. பரந்துபட்ட பார்வையில் இஸ்லாத்தை வாசகர்களுக்கு அறிமுகப்படுத்துவதுடன் பண்பாட்டு ரீதியாக எத்தகைய செல்வாக்கைச் செலுத்துகிறது என விவரிக்கிறார் ராய்.

நம்பிக்கையற்ற சூழலில் மக்களை வழிநடத்துவதற்கு இஸ்லாம் கொண்டிருந்த ஆற்றலும் அதன் புரட்சிகரப் பண்புமே இஸ்லாத்தின் தனித்துவமான வெற்றிக்குரிய முதன்மையான காரணிகள் என அறிமுகப்படுத்துகிறார் அவர்.

தார்த்தாரியர் போன்றோரின் படையெடுப்புகளுடன் ஒப்பிட, அராபிய எழுச்சியும் இஸ்லாத்தின் பரவலும் எவ்வாறு வேறுபட்டிருக்கிறது என்பது சிறப்புற விளக்கப்படுகிறது.

இஸ்லாத்தின் சமூக வரலாற்றுப் பின்னணியை விவரிக்கும் ராய், வெற்றிக்கான காரணங்களைப் பட்டியலிடுவதுடன், ஜொராஸ்டரின் பண்டைய மதம், கத்தோலிக்கத்தின் செயற்பாடுகள் எந்த விதத்தில்  இஸ்லாத்தை மக்களுக்கு நெருக்கமாக்கின என்பதையும் விவரிக்கிறார். 

முஹம்மதுவும் அவருடைய போதனைகளும், ஓரிறைவாத நம்பிக்கைக் கோட்பாடு பற்றி விவாதிக்கப்படும் நூலில், இஸ்லாத்தின் வரலாற்றுப் பாத்திரமும் உறுதி செய்யப்படுகிறது.
இஸ்லாமும் இந்தியாவும் பற்றிக் கூறும்போது, இஸ்லாம் என்ற பதாகையின் கீழ் ஒடுக்கப்பட்டவர்கள் திரண்டார்கள் என்பதும் கூறப்படுகிறது. இஸ்லாமையும் அதன் பரவலையும் எம்.என். ராய் வழி அறிய உதவும் நூல்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com