வியாபாரத்தில் வெற்றி (தொட்டதெல்லாம் பொன்னாகும்) - சோம. வள்ளியப்பன்; பக்: 216; ரூ.250; கிழக்குப் பதிப்பகம், சென்னை-14; ✆ 044-4200 9603.
எது வியாபாரம்?, எது வெற்றி?, வெற்றி பெற என்ன செய்ய வேண்டும்?, வெற்றிக்கான தயாரிப்பு, வியாபாரம் வெற்றி பெற என ஐந்து அத்தியாயங்களில் தெளிவாகவும், விரிவாகவும் நூலாசிரியர் விளக்கியுள்ளார்.
வியாபாரம் செய்பவரும் வாடிக்கையாளர்களாக இருப்பவர்களும் மனிதர்களாக இருக்கும் வரை அந்த அடிப்படைகள் மாறாது. எந்த வியாபாரம் செய்பவரும் தெரிந்து கொள்ள வேண்டிய, பின்பற்றத்தக்க, நிச்சயம் பலன் தரவல்ல அடிப்படைகள் நூலில் ஏராளம் உள்ளன.
செயல்பாடு எப்படி இருந்தாலும் வெற்றி நிச்சயம் என்பதை அனுபவபூர்வமாகச் செய்து காட்டியவர்கள் பலர் உள்ளனர். அத்தகைய அணுகுமுறைகள், செயல்பாடுகளின் தொகுப்புதான் இந்த நூல். வெற்றி பெற விரும்பும் எல்லோருக்கும் இந்த நூல் கண்டிப்பாக 'கை' கொடுக்கும்.
'வெற்றி என்பது வியாபாரத்தின் உயிர்நாடி. அது இல்லையேல் வியாபாரம் ஏன்? என்று தொடங்கி வெற்றி என்பது என்ன? இலக்கு எப்படி இருக்க வேண்டும்?' என விளக்கியுள்ள நூலாசிரியர், ஒரு வெற்றியாளர் எப்படி உருவாகிறார் என்பதை அருமையாக விளக்கியுள்ளார்.தொடர்ந்து முயற்சி செய்தால் வெற்றி நம் கையில் என்கிறார். வியாபார உத்திகள் குறித்து நன்றாக விளக்கியுள்ளார்.
வர்த்தக உலகைப் புரிந்து கொள்ள வழிகாட்டும் நூல் இது. வியாபாரத்தின் ஒவ்வொரு பகுதியையும் எடுத்து எளிமையாக விளக்கியுள்ளார் நூலாசிரியர்.
வணிக உலகில் இருப்பவர்களுக்கும், வியாபாரத்தில் நுழைய யோசித்துக் கொண்டிருப்பவர்களுக்கும் இந்த நூல் சரியான தேர்வாக இருக்கும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.