சமூகவியல் பார்வையில் தொல்காப்பியம்

சமூகவியல் பார்வையில் தொல்காப்பியம்
Updated on
1 min read

சமூகவியல் பார்வையில் தொல்காப்பியம் - க.ப.அறவாணன்; பக்.304; ரூ.300; தமிழ்க் கோட்டம், சென்னை-29; ✆ 9597717485.

தொல்காப்பியத்தை இலக்கண, இலக்கியப் பார்வையிலிருந்து சற்று விலக்கி, சமூகப் பார்வைக்கு நூலாசிரியர் கொண்டுவந்துள்ளார். நூலில் 30 கட்டுரைகளில் 26 கட்டுரைகள் தொல்காப்பியம் குறித்த ஆய்வுகளாக,  முழுமையாக, எளிமையாகப் படிக்கும் வகையில் இருக்கின்றன.  

அகத்தியரின் சீடரான  தொல்காப்பியரை சக சீடரான அதங்கோட்டாசான் ஓலைச்சுவடி வழிநின்று ஆய்ந்து வெளிப்படுத்தியுள்ளார். அத்துடன் தொல்காப்பிய சொற்கள் குமரி மாவட்டத்தில் இன்றும் எந்தவகையில் வழக்கில் உள்ளது என்பதையும் சான்றாக்கியுள்ளார்.

'தொல்காப்பியமும் ஆப்பிரிக்கமும்' எனும் கட்டுரையில்,  தெலுங்கு, செஞ்சுப் பழங்குடியினர், சோழகர், ஆப்பிரிக்க மொழியான சோளா வரையிலும் தொல்காப்பியம் தொடர்புடையதாக இருப்பதையும் நூலாசிரியர் விளக்கியுள்ளார்.

'வடவேங்கடம்' எனும் கட்டுரையில் அதன் இயற்கை அமைப்பு, பெயர்க்காரணம், வேங்கடத்தை ஆண்ட அரசர்கள், பண்டைய நாடுகளை தொல்காப்பிய வழிநின்று விளக்கியுள்ளது நல்ல அனுபவத்தைத் தருவதாக உள்ளது.

'பழந்தமிழர் வாழ்வியல் பிரிவு' எனும் கட்டுரையில் தமிழரின் மரபானது பெண்ணை மையப்படுத்தியிருந்ததையும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

ஆய்வை மேற்கொள்ளும் அனைவருக்கும் இருட்டில் வழிகாட்டும் விளக்கைப் போல இந்த நூல் விளங்கும் என்பதில் சந்தேகமில்லை. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com