ஆளப்பிறந்தவர் நீங்கள்!

ஆளப்பிறந்தவர் நீங்கள்!
Updated on
1 min read

ஆளப்பிறந்தவர் நீங்கள் - சோம. வள்ளியப்பன், பக்.264; ரூ.300, கிழக்கு பதிப்பகம், சென்னை- 14; ✆ 044-42009603.

நாம் இவரைத்தான் பின்பற்ற வேண்டும் என்று மக்கள் தங்கள் மனதில் யாரை ஏற்றுக் கொண்டு பின்பற்றுகிறார்களோ அவர்களே தலைவர்கள்.

தலைமைப் பொறுப்பைத் தக்க வைத்துக் கொள்ளவும், காப்பாற்றிக் கொள்ளவும், சொந்தத் தலைமைப் பண்புகள்தான் உதவும். 

தலைமை பற்றி நிறைய கேள்விகள்  பலருக்கும் உண்டு. இவற்றுக்கெல்லாம் விடை சொல்கிறது இந்த நூல்.

தலைமைப் பண்பு என்பது தானே வருவதல்ல. வளர்த்துக் கொள்வது. எவ்வாறெல்லாம் நம்மை தலைமைப் பதவிக்கு தயார்படுத்திக் கொள்வது என்பது ஒரு கலை. சிந்தனை, செயலில், முடி
வெடுப்பதில், அணுகுமுறையில் வித்தியாசம் இருப்பது அவசியம். அத்துடன் ஆளுமை மேம்பாடு, மனதளவில் நம்மை நாமே உயரே தூக்கி உட்கார வைத்து அழகு பார்ப்பது அவசியம்.
 
தலைவன் என்றால்..., எதைச் செய்து முடிப்பதற்குத் தலைமை?, தலைமை தோற்பது ஏன்?, தலைவனாக இருப்பதில் உள்ள சிரமங்கள் என  அடுத்தடுத்த அத்தியாயங்கள் மூலம் ஒரு சிறந்த தலைவனாக தேவையான வழிகாட்டுதல்களை வழங்குகிறார் நூலாசிரியர்.

தலைவன் என்பவன், மற்றவர்களின் எண்ணங்களில் தாக்கத்தை ஏற்படுத்தி, அவர்களை அவன் எண்ணுகிற விதமாகவே செயல்பட வைக்கிறவன் என தலைவனுக்கான இலக்கணத்தை தெளிவாக வகுத்து அதற்கு ஆற்ற வேண்டிய கடமைகளும், மேற்கொள்ள வேண்டிய செயல்பாடுகளும் உதாரணங்களுடன் பட்டியலிடப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com