இந்திய இலக்கியச் சிற்பிகள் தொ.பரமசிவன் - அ.மோகனா; பக்.128; ரூ.50; சாகித்திய அகாதெமி, சென்னை - 18; ✆ 044 24311741.
தொ.ப.வின் ஆய்வுகள் குறித்து 'பண்பாட்டு அசைவுகள்', 'தெய்வங்களும் சமூக மரபுகளும்', 'அழகர் கோயில்', 'இலக்கிய ஆய்வுகள்', 'அரசியல் கருத்துநிலை' ஆகிய ஐந்து தலைப்புகளில் இந்நூல் நுணுக்கமாக ஆராய்கிறது.
நூற்றாண்டுகளின் தொடர்ச்சியைக் கவனப்படுத்துதல், எந்தவொரு நிகழ்வையும் தர்க்கபூர்வமாக ஆராய்தல், நடுநிலைமையுடன் வரலாற்றை அணுகுதல், இலக்கியத்தை அதன் காலம் சார்ந்து சமூகவியல் வாசிப்புக்கு உட்படுத்துதல் ஆகியன தொ.ப.வின் ஆய்வுப் பண்புகளாக உள்ளன என்பதை இந்நூல் எடுத்தியம்புகிறது.
ஒரு செடியின் வாசனையை வைத்தே அது மருத்துவ குணமுடையதா அல்லது நச்சுத்தன்மை உடையதா என்பதை நம் முன்னோர்கள் உணர்ந்திருந்தனர். ஆனால் இன்றைய ஆங்கில மருந்து குறித்து விற்பனை பிரதிநிதிகள் விளக்கிச் சொல்லித்தான் மருத்துவர்கள் அறிய வேண்டிய அவலநிலையையும், அதன் பின்னணியில் உள்ள பன்னாட்டு மூலதனம் குறித்தும் தொ.ப. முன்வைக்கும் ஆய்வுக் கருத்துகள் நமது பண்பாடு சார்ந்த மருத்துவ அறிவின் மதிப்பை எடுத்துரைக்கிறது.
மொழி, உணவு, அறிவியல், கணிதம், மருத்துவம் உள்ளிட்டவற்றில் முன்னோடியாக இருந்த தமிழ்ச் சமூகம் ஐரோப்பிய காலனிய ஆதிக்கத்துக்குப் பிறகு எவ்வாறு நசிந்தன என்பதையும், அவற்றை மீட்டெடுப்பதன் அவசியம் குறித்தும் தொ.ப. கவனப்படுத்தியுள்ளார்.
மிக எளிய உரைநடையில், ஆர்வத்தைத் தூண்டும் வகையில், அனைவரும் வாசிக்க உகந்த வகையில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.