திருமங்கையாழ்வார் மடல்கள் - ம.பெ. சீனிவாசன்; பக்.144; ரூ.175; கிழக்கு பதிப்பகம், சென்னை - 600 014; ✆ 044-4200 9603.
பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான திருமங்கையாழ்வார் பாடிய சிறிய திருமடல், பெரிய திருமடல் ஆகியன நாலாயிர திவ்வியப் பிரபந்தத்தில் தொகுக்கப்பட்டுள்ளன. எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த இவரின் மடல்கள் காலத்தால் முந்தியிருந்து தமிழில் புது இலக்கிய மரபைத் தோற்றுவித்தன. பெருமானை நாயகனாகவும் தன்னை நாயகியாகவும் நினைந்து திருமங்கையாழ்வார் புனைந்த பாடல்கள் தனிச்சிறப்பு பெற்றவை.
தலைவி நிலையில் ஆழ்வார் பேசுவது காதல் சிற்றின்ப பேச்சாகத் தோன்றினாலும், அதன் உள்ளுறை பொருளானது, இறைமையை அறிதல், இறையின்பம் நுகர்தல் ஆகியவையே. இதனை நன்றாக விளக்கியுள்ளார் நூலாசிரியர். பிற்பகுதியில் ஆழ்வார் காலத்துக்குப் பிந்தைய மடலேறுதல் குறித்த கருத்துகள் நூலாசிரியரின் ஆய்வுப் புலமையை வெளிப்படுத்துவதாக உள்ளன.
மடல் இலக்கண வரலாறு, ஆழ்வாரின் திருமடல்களின் உள்ளடக்கச் சுருக்கம், அவற்றின் மீதான தனியன்கள், துணை நூல்கள் என சீரிய தொகுப்பாக அளித்துள்ளார்.
தமிழ் இலக்கிய மரபையும் வைணவ சமயக் கோட்பாட்டையும் இணைத்துப் பாடி, மரபுகளுக்கு அடங்கியும் மீறியும் கவி புனைந்ததை வியத்தகு எளிமையுடன் விளக்குகிறது இந்நூல்.
இலக்கிய ஆய்வு நூலுக்கு இலக்கணமாக, மூல எழுத்து வடிவம், கருத்து, ஒப்புநோக்கி சான்று தெளிதல், எடுத்துக்காட்டுகள் தருதல் போன்ற பல்வேறு முறைகளிலும் ஆசிரியர் தனது கருத்தை உறுதியாக நிலைநாட்டும் இந்நூலானது, வைணவர் மட்டுமல்லாது தமிழார்வலர்கள் அனைவரும் கட்டாயம் படிக்க வேண்டியதாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.